Parandur international airport, old trams, chennai trams, madras trams
Parandur international airport : சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்திருக்கும் விமான நிலையத்தினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் இரண்டாவது விமான நிலையம் கட்டப்படுவதற்காக காஞ்சிபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற, காஞ்சிபுரத்தில் உருவாகி வரும் பரந்தூர் விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக கட்டப்பட உள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பரந்தூரில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
Advertisment
பரந்தூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகாமையில் இந்த இடம் அமைந்திருப்பதால் இந்த பகுதியில் விமான நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இங்கு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், சர்வதேச விமானங்களை இங்கிருந்து இயக்கலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையமாக இருப்பதோடு மட்டுமின்றி இங்கு வர்த்தக ரீதியான போக்குவரத்துகளையும் அதிகப்படுத்த அலகுகள், பயிற்சி மையங்களும் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை மக்கள் எந்த சிரமும் இன்றி அடைய போக்குவரத்து திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தயார் செய்யபட்டுள்ளது. விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவை திருமழிசை மற்றும் பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளாது. இந்த வழித்தடம் சென்னை மத்திய ரயில் நிலையம், கோயம்பேடு, ஆலந்தூர் மெட்ரோ ஆகியவற்றை கோயம்பேட்டில் இணைக்கும். சிட்டிக்குள் இருந்து செல்லும் பயணிகளுக்கு இந்த வழித்தடம் எளிமையானதாக இருக்கும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ட்ராம் போன்ற எடை குறைவான ரயில்கள் மூலமாக பரந்தூர் விமான நிலையத்தை அடைய வழிவகை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 4 பெட்டிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்த ரயில்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தை பரந்தூருடன் இணாஇக்கும். இதற்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளாது. மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ பாதை அமைத்தால் அது ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது எந்த போக்குவரத்து மூலம் எளிமையாக மக்கள் விமான நிலையத்தை அடையமுடியும், எந்த போக்குவரத்து சாத்தியமானது என்பதை தமிழக தொழில் மேம்பாட்டு கழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.