Advertisment

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்கள் எதிர்ப்பு; கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 12 கிராம மக்கள் எதிர்ப்பு; அமைச்சர் கலந்துக் கொண்ட கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; காரணத்தைக் கேட்டு அதிர்ந்த போலீஸ்

Parandur people oppose Chennai airport land acquisition: சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ள நிலையில், இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தை, தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என 12 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.

Advertisment

சென்னை அருகே பரந்தூரில் ரூ.20,000 கோடியில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது. கிரீன்ஃபீல்ட் விமான நிலையம், 2008க்கான வழிகாட்டுதல்களின்படி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் தள அனுமதி வழங்கப்பட்டவுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 12 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தநிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க சுற்று வட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில், பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம், கள்ளிப்பட்டு, நாகப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, நேற்று அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 12 கிராம மக்களிடம் குறைகளை கேட்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், காலை 10 மணியளவில் தொடங்க வேண்டிய கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால், கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் கிராம மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்து, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். இறுதியாக மதியம் தொடங்கிய கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறு, குறு தொழில் துறை அமைச்சர் டி.எம்.அன்பரசன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இந்த நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம். அரசு கொடுக்கும் பணத்தை வைத்து கொஞ்ச நாட்கள் வாழலாம். அதன் பிறகு நாங்கள் எப்படி வாழ்வது? இது எங்கள் முன்னோர்களின் நிலம், எங்கள் நிலத்தை விமான நிலையத்துக்கு கொடுக்க விரும்பவில்லை, என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment