மின்தடை காரணமாக 3 நோயாளிகள் பலி! டீன் விளக்கம்

அரசு மருத்துவமனைகளில் போதுமான உபகரணங்கள் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.

Madurai Rajaji Hospital : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் நேற்றிரவு மின்தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஜெனரேட்டர்கள் பிரச்சனையை சந்திக்க, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 நோயாளிகள் உயிரிழந்தனர்.

தலைமை மருத்துவர் விளக்கம்

ரவிச்சந்திரன், மல்லிகா, மற்றும் பழனியம்மாள் ஆகிய மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மின் தடை ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது என மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : Latest Tamil News Live: சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ பிரபு மனுத் தாக்கல்

உயிரிழந்த மூன்று நபர்களின் உடல்நிலையும் மிகவும் மோசமானதாக இருந்ததாகவும், வெண்டிலேட்டர்கள் பேட்டரி மூலம் பெறப்பட்ட மின்சாரம் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றும், மின் தடை தொடர்பாக மின்சார வாரியத்திடம் புகார் அளிக்க இருப்பதாகவும் மருத்துவமனை டீன் வனிதா அறிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான உபகரணங்கள் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் போனதன் ஒரே மாதத்தில் 30 குழந்தைகள் பலியாகினர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close