"இது மாநிலத்தின் சமூக நீதி பிரச்னை. சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை இதில் சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தரவுகளை உரிய முறையில் திரட்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதாடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
மிகவும் பின்தங்கிய சமுதாயம், குடிசை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் என உண்மை நிலை அடிப்படையில் தரவுகளை சேகரித்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி தெரிவித்தார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவது தொடர்பான தமிழக அரசின் சட்டம் 8/2001 தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் தமிழக அரசு சிறப்பாக வாதாடியது.
அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும், எங்களை பொறுத்தவரை ஏற்கனவே மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய அரசு என்ற நிலையில்,
உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடி இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ஆணித்தரமாக வாதாடி இருக்கின்றனர்.
இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள், தேவையான ஆவணங்களை பதிவு செய்வது உள்ளிட்ட அனைத்திலும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சிறப்பாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றமே பாராட்டியுள்ளது.
இந்த சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரை 2012இல் வழங்கப்பட்டது. ஆனால் இதற்கான இதற்கான சட்ட முன்வடிவு 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மாலை வெளியாகிறது என்று செய்திகள் வெளியாகின்றன.
அன்று மாலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு, இந்த சட்ட முன்வடிவு அவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுபோன்று அவசரகதியில் இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டதால் தான் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் – ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மற்ற குறைகளை நானும் இங்கே கூறி ஏட்டிக்கு போட்டி அரசியல் செய்ய விரும்பவில்லை.
இந்த சிறப்பு இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானது என்று யார் கூறியது என்ற வாதத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை.
ஏனென்றால் இது மாநிலத்தின் சமூக நீதி பிரச்னை. சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை.
இந்தப் பிரச்னை தொடர்பாக சட்ட வல்லுநர்கள் கலந்தாலோசித்து நிச்சயமாக சமூக நிதி நிலைநாட்டப்படும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் இந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அதிகாரம் இந்த மன்றத்திற்கும், மாநில அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையில், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.