Advertisment

Periyar University UG, PG Results 2018: முடங்கிய இணையதளம் சரியானது, periyaruniversity.ac.in -ல் பார்க்கலாம்

Periyar University Released Result for UG & PG Exams:: periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 10 நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
periyar university result 2019 date and time, periyar university.ac.in result 2019, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்

periyar university result 2019 date and time, periyar university.ac.in result 2019, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்

Periyar University UG and PG Exams Result Declared: பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் UG, PG தேர்வு முடிவுகளை காணலாம். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வர் வாயிலாகத் தேர்வாணையர் அலுவலகத்திற்கு, தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மொத்த மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கியது. பின்னர் அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள்.

Advertisment

தமிழ்நாட்டில் முக்கிய பல்கலைக்கழகங்களில் பெரியார் பல்கலைக்கழகமும் ஒன்று. சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கும், இந்த பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 5) வெளியானது.

பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். பிஜி மற்றும் யுஜி வகுப்புகளுக்கான தேர்வு கடந்த நவம்பரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ரிசல்ட் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Periyar University Results in periyaruniversity.ac.in: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் Periyar University Results in periyaruniversity.ac.in: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்

Periyar University UG, PG Results 2018: பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் வெளியானது

இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.

விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது வழக்கமான நடைமுறை.

Result Details: Periyar University November 2018 Results: ரிசல்ட் டவுன்லோடு, இணையதளம் இதோ...

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வர் வாயிலாகத் தேர்வாணையர் அலுவலகத்திற்கு, தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதுவும் வழக்கமான நடைமுறை.

பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 82 கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட கல்லூரிகளை நிர்வகிக்கிறது. இந்தப் பகுதியில் பிஜி, யுஜி பயின்ற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு முடிவை எதிர்நோக்கியிருந்தார்கள்.

இதற்கிடையே தேர்வு முடிவுகள் வெளியான சில நிமிடங்களில் பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in சரியாக செயல்படவில்லை என மாணவ, மாணவிகள் தரப்பில் கூறப்பட்டது.

Read More: பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் குறித்து முன்னதாக வந்த செய்தி

மொத்தமாக அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ள முயன்றதால் இந்த நிலை எனத் தெரிகிறது. எனவே மாணவ, மாணவிகள் பொறுமையாக காத்திருந்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை:

1.மேற்கண்ட அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.

2.முகப்பு பக்கத்தில், ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும்.

3. புதிய பக்கம் வெளிப்படும்.

4.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.

5. ‘summit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.

6. ரிசல்ட் தெரிய வரும்.

7.ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பெரியார் பல்கலைக்கழக வழக்கமான நடைமுறைப்படி மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 10 நாட்களில் விண்ணப்பிக்கலாம். பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in மொத்த மாணவர்களின் முற்றுகையால் முதலில் முடங்கியது. பின்னர் அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. எனவே மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகிறார்கள்.

Periyar University UG, PG Results 2018: பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் வெளியானது.

Periyar University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment