Advertisment

Periyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவு வெளியானது, periyaruniversity.ac.in -ல் பாருங்கள்!

Periyar University Results 2018 LIVE UPDATES: UG, PG results declared, check here at periyaruniversity.ac.in  பெரியார் பல்கலைக்கழக UG, PG தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அது தொடர்பான லைவ் நிகழ்வுகள்:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
periyar university result 2019 date and time, periyar university.ac.in result 2019, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்

periyar university result 2019 date and time, periyar university.ac.in result 2019, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்

Periyar University Results 2018: பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் UG, PG தேர்வு முடிவுகளை காணலாம்.

Advertisment

பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் முக்கிய பல்கலைக்கழகம்! இது சேலத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 18) வெளியாகிறது.

Periyar University Results 2018 முன்னதாக வெளியிடப்பட்ட செய்தி: ஆனால் அன்று ரிசல்ட் வெளியாகவில்லை

பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம். பிஜி மற்றும் யுஜி வகுப்புகளுக்கான தேர்வு கடந்த ஏப்ரலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி ரிசல்ட் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Periyar University Results 2018 LIVE UPDATES: பெரியார் பல்கலைக்கழக UG, PG தேர்வு முடிவுகள் தொடர்பான லைவ் நிகழ்வுகள்:

6:30 PM : April 2018 - UG / PG Examinations Result ஏப்ரல் 2018 இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவ, மாணவிகள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்.

 

Periyar University Results 2018 LIVE UPDATES, பெரியார் பல்கலைக்கழகம், தேர்வு முடிவு Periyar University Results 2018 LIVE UPDATES, பெரியார் பல்கலைக்கழகம், தேர்வு முடிவு

6:00 PM : மாலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. உங்கள் தேர்வு முடிவை அதிகாரபூர்வ இணையதளத்தில் காணலாம்!

4:45 PM : பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடுவதாக காலையில் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் மாலை 5 மணியை நெருங்கும் வேளையிலும் இன்னும் ரிசல்ட் வெளியாகவில்லை.

பல்கலைக்கழக தொடர்பு எண்களான 0427-2345766 , 2345520 ஆகியவற்றில் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பில் தொடர்புகொண்டோம். முதல் எண் ‘பிஸி’. இரண்டாவது எண்ணில் ‘ரிங்’ போனாலும், யாரும் எடுக்கவில்லை. இதனால் ரிசல்ட் வெளியாவது குறித்து உறுதியான தகவல் பெற முடியவில்லை.

4:00 PM : விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவும் வழக்கமான நடைமுறை.

3:45  PM : மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வர் வாயிலாகத் தேர்வாணையர் அலுவலகத்திற்கு, தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். இது வழக்கமான நடைமுறை.

Periyar University Results 2018 LIVE UPDATES, பெரியார் பல்கலைக்கழகம், தேர்வு முடிவு Periyar University Results 2018 LIVE UPDATES பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவு தாமதம்

3:30 PM :பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 82 கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களது தேர்வு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேர்வு முடிவு தாமதமாவது குறித்து பெரியார் பல்கலைக்கழகம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

2:30 PM: ரிசல்ட் சற்று நேரத்தில் வெளியாகும் என காலையிலேயே இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டபோதும், இதுவரை இணையதளத்தில் வெளியாகவில்லை. தேர்வர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

2:00 PM : பெரியார் பல்கலைக்கழகம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட கல்லூரிகளை நிர்வகிக்கிறது. இந்தப் பகுதியில் பிஜி, யுஜி பயின்ற மாணவ, மாணவிகள் இந்த தேர்வு முடிவை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

11:00 AM: இன்னும் சற்று நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10:30 AM : முன்னதாக ஜூன் 15-ம் தேதி இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அது தொடர்பாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் செய்தியும் வெளியானது. ஆனால் அன்று முடிவுகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Periyar Universty PG, UG results 2018 Periyar University Results 2018, பெரியார் பல்கலைக்கழக இணையதளம் periyaruniversity.ac.in -ல்!

10:00 AM : பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை:

1.மேற்கண்ட அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.

2.முகப்பு பக்கத்தில், ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும்.

3. புதிய பக்கம் வெளிப்படும்.

4.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.

5. ‘summit' பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.

6. ரிசல்ட் தெரிய வரும்.

7.ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

பெரியார் பல்கலைக்கழக வழக்கமான நடைமுறைப்படி மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 10 நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

Periyar University UG, PG Results 2018: பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் வெளியாகிறது.

Periyar University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment