சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை

Petrol/Diesel Price in Chennai Today : டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

 Petrol Diesel Price, Petrol Price and Diesel Price in Chennai on 22nd September
 Petrol Diesel Price

Petrol Diesel Price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 85.69விற்கு விற்பனையாகிறது. டீசலின் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 78.10 ஆகும்.

முன்பெல்லாம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாதத்தில் இரண்டு முறை மற்றுமே மாற்றப்படும். ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதம் 16ம் தேதி எரிபொருட்களின் விலையை நாள் தோறும் நிர்ணயிக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு.

அதனைத் தொடர்ந்து நாள் தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த நிலையில் வரலாற்று நிகழ்வாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 80 ரூபாயைக் கடந்தது.

மேலும் படிக்க : நான் அமைச்சராக இருப்பதால் பெட்ரோல் விலை ஏற்றம் என்னை பாதிக்கவில்லை

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்திய மாநிலங்களில் இருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள் பாரத் பந்த் என்று ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபட்டது. ஆனாலும் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

Petrol Diesel Price : டெல்லி மற்றும் மும்பை 

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 82.44 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 73. 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 89.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 78.42 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Web Title: Petrol diesel price in chennai today on 22nd september

Next Story
ஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட வருகிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தூத்துக்குடி, வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com