/tamil-ie/media/media_files/uploads/2018/07/s815.jpg)
எழுந்து வா.... எழுந்து வா.... !
காவேரி மருத்துவமனை வாசலில் குழுமியிருக்கும் எண்ணற்ற திமுக தொண்டர்களின் ஏக்கத்தோடு கூடிய கோஷம் இது. திடீர் ரத்த அழுத்த குறைவு காரணமாக, நேற்று இரவு அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலம், கலைஞர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல, ஸ்டாலினே ஒரு கணம் கலங்கித் தான் போனார்.
மேலும் படிக்க: காவேரி மருத்துவமனையில் கருணாநிதி LIVE UPDATES
ஆனால், அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் கருணாநிதியின் இரத்த அழுத்தம் சீரானது. இரவு இறங்கியிருந்த பல்ஸ் ரேட், மீண்டும் நார்மலானது. இதனை காவேரி மருத்துவமனை அறிக்கையும் உறுதி செய்ய, நிம்மதி பெருமூச்சு விட்டனர் உடன் பிறப்புகள்.
கட்சி பாகுபாடின்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரளாக வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் செல்கின்றனர். நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், தற்போது சிகிச்சை பெறுவது வரை உள்ள புகைப்படத் தொகுப்பு இதோ...
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.