தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது! – காவேரி மருத்துவமனை அறிக்கை

M Karunanidhi in Cauvvery Hospital: ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார்.

By: Updated: July 28, 2018, 08:17:05 PM

Dmk Chief Karunanidhi Health: திமுக தலைவராக கருணாநிதி 50வது ஆண்டை எட்டியுள்ளார். இந்த சூழலில் அவரது உடல்நிலை தொடர்ந்து குன்றிக் காணப்படுகிறது. இதையடுத்து அவரது கோபாலபுரம் இல்லத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு, கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் பதற்றம் உண்டானது. காவேரி மருத்துவமனையின் மருத்துவக்குழுவும், கருணாநிதியின் தனி மருத்துவர் கோபாலும் கோபாலபுரம் வந்தனர். கருணாநிதியின் மகன் அழகிரி, மகள் கனிமொழி மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் மீண்டும் கோபாலபுரம் வந்தனர்.

Dmk Chief Karunanidhi Health LIVE updates: காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை Dmk Chief Karunanidhi Health LIVE updates: காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள்

கோபாலபுரம் இல்லத்திலிருந்து, ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தயார் நிலையில் இருந்த சிறப்பு மருத்துவர்கள் குழு, கருணாநிதியை ஐ.சி.யூ., வார்டில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். காவேரி மருத்துவமனைக்கு முன்பு தொண்டர்கள் திரண்டனர்; போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

Dmk Chief Karunanidhi Health LIVE updates: திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார்.

உடனடி சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் நாடித் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியது. தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.மு.க.அழகிரி, ஸ்டாலின், ராசாத்தி அம்மாள், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் மருத்துவமனையில் உள்ளனர்.

Karunanidhi Health LIVE updates: DMK President admitted in Chennai hospital

08.06 PM: காவேரி மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது”. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

08.00 PM: திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிறுநீரக தொற்று நோய் மற்றும் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நலம் குறித்த ஹேஷ்டாக்கை ட்விட்டரில் பகிர்ந்து பலரும் டிரெண்டாக்கி வருகின்றனர். இதனால், கருணாநிதி உலக அளவில் 2வது இடத்தில் டிரெண்டாகியுள்ளார். கருணாநிதி நலம்பெற்று வரவேண்டும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

07.32 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இணையதளங்களில் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது; பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர். கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

07.25 PM: மு.க.அழகிரி, தயாநிதி அழகிரி, துர்கா ஸ்டாலின், துரை முருகன், உதயநிதி ஸ்டாலின், ஆற்காடு நவாப் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

07.10 PM: காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு. கோஷம் எழுப்பிக் கொண்டு திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்குள் நுழைய முற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

06.15 PM: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கருணாநிதி பூரண குணமடைந்து மீண்டும் மக்களை சந்திக்க வேண்டி பிரார்த்திக்கிறேன் -இல.கணேசன்

5:10 PM:  திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என  மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

 4:45 PM: கருணாநிதி உடல் நலம் பெற தனது விருப்பத்தை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘கருணாநிதி ஒரு பிறவிப் போராளி’ என்றும் குறிப்பிட்டார்.

4:00 PM: ‘காவேரி மருத்துவமனையில் கருணாநிதி 2 நாட்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் இருப்பார்; அவருக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டது’ என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

3:30 PM: கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் அவரது உடல் நலனுக்காக பல்வேறு இடங்களில் கட்சி பேதம் இன்றி கோவில்களில் பிரார்த்தனை நடத்தினர். அவர் பயின்ற பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

3:00 PM: மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கிளம்பிச் சென்றார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘கருணாநிதியின் உடல்நிலை நேற்றைவிட இன்று முன்னேற்றம் கண்டிருப்பதாக’ கூறினார்.

முதன்முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்ற கலைஞர்… கோபாலபுரத்தில் மறக்க முடியாத நள்ளிரவு! To Read, Click Here

தெற்கிலிருந்து ஒரு சூரியன் விழிப்பதற்காக பிரார்த்திக்கும் தமிழ் நெஞ்சங்கள்

2:45 PM : காவேரி மருத்துவமனை எதிரே திரண்டிருக்கும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடியும், சிலர் பெருங் குரலெடுத்து அழுதபடியும் காணப்படுகின்றனர்.

2:30 PM: கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார். கருணாநிதியின் நலன் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தார் அவர்.

M Karunanidhi Health, Kalaignar, Karunanidhi health news today, Tamil Nadu EX Chief Minister M Karunanidhi, DMK Chief M Karunanidhi Latest News LIVE updates Dmk Chief Karunanidhi Health LIVE updates: கருணாநிதி நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த நிர்மலா சீதாராமன்

2:15 PM : இசை அமைப்பாளர் இளையராஜா, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார்.

1:45 PM: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காவேரி மருத்துவமனைக்கு வந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கலைஞரின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தேன். அவர் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

12:35 PM: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியை நலம் விசாரித்தார். பிறகு நிருபர்களிடம் பேசுகையில், ‘சோனியா, ராகுல் ஆகியோர் கேட்டுக்கொண்டபடி நலம் விசாரிக்க வந்தேன். மருத்துவர்களிடம் அதிக நேரம் விவாதித்தேன். குடும்பத்தினரிடமும் பேசினேன். கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது என்பதுதான் இன்றைய செய்தி.

குறைந்த பல்ஸ் ரேட்… தடுமாறிய ஸ்டாலின்! புகைப்படத் தொகுப்பு To Read, Click Here

”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே”… கலைஞரின் மறக்க முடியாத மேடை பேச்சுகள்! To Read, Click Here

திமுகவின் ஆளுமை.. கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்பட தொகுப்பு! To Read, Click Here

கருணாநிதி ஐ.சி.யு.வில் இருப்பதால் நேரடியாக பார்க்கவில்லை. இங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் அவரது குடும்பத்தினர் திருப்தி அடைந்திருக்கிறார்கள்’ என்றார் குலாம்நபி ஆசாத்.

12:25 PM : காவேரி மருத்துவமனை எதிரே திரண்டிருக்கும் திமுக தொண்டர்கள் கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டபடி இருக்கிறார்கள்.

M Karunanidhi Health, Kalaignar, Karunanidhi health news today, Tamil Nadu EX Chief Minister M Karunanidhi Dmk Chief Karunanidhi Health LIVE updates: கருணாநிதி அனுமதிக்கப்பட்ட காவேரி மருத்துவமனை முன்பு கதறும் தொண்டர்கள்

12:00 PM: நடிகர் பிரபு, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.

11:10 AM: “திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற்று குணமடைந்து வருகிறார். 5 முறை முதல்வராகவும், தற்போதும் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் கருணாநிதிக்கு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயார். ” சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

10:55 AM: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு திருச்சி சிவா, நடிகர் நாசர் வருகை

10:40 AM:  திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் என கனிமொழி எம்.பி. தகவல்

M Karunanidhi Health, Kalaignar, Karunanidhi health news today, Tamil Nadu EX Chief Minister M Karunanidhi, DMK Chief M Karunanidhi Latest News LIVE updates Dmk Chief Karunanidhi Health LIVE updates: கருணாநிதி நலமுடம் இருப்பதாக கனிமொழி பேட்டி

10:30 AM: ”தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட கருணாநிதி நலமடைந்து வருவது மகிழ்ச்சி” : அதிமுக எம்.பி.  தம்பிதுரை

10:20 AM: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது சொந்த ஊரான திருக்குவளையில் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்; விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்

10:10 AM: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மு.க.அழகிரி வருகை


9:50 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காவேரி மருத்துவமனைக்கு வருகை

9:40 AM: “திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து சகஜ நிலைக்கு திரும்ப பிராத்திக்கிறேன் கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவசர சிகிச்சை தேவைப்பட்டது என்றார்; கவலைப்பட வேண்டியநிலை இல்லை என்பதை அறிந்துகொண்டேன்” பாஜக எம்.பி. இல.கணேசன் ட்விட்டரில் பதிவு.

9:30 AM: “திமுக தலைவர் கருணாநிதி விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்” டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்

9:20 AM:திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


9:00 AM: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி வருகை.

Karunanidhi Health LIVE updates: DMK President admitted in Chennai hospital

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk leader karunanithi hospitalised updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X