Advertisment

டெல்லிக்கு கண்டிப்பாக வரணும்; பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு மோடி அழைப்பு

ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பாகன் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்

author-image
WebDesk
New Update
modi

முதுமலையில் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்

முதுமலை யானைகள் காப்பகத்தில் ஆசையோடு கை கொடுத்த யானையை பிரதமர் நரேந்திர மோடி அன்போடு தட்டிக் கொடுத்தார். மேலும், ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தின் தம்பதிகளையும் பிரதமர் நேரில் சந்தித்து பேசினார்.

Advertisment
publive-image

சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில், விமான நிலைய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னையில் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மைசூர் சென்று இரவு தங்கினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தை பார்வையிட்டார்.

இதையும் படியுங்கள்: ’காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம்’: பிரதமர் மோடி

அதன்பின்னர் பந்திப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலைக்கு வந்தார். முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த யானைகளுக்கு பிரதமர் கரும்பு உணவளித்தார். அப்போது யானை ஒன்று பிரதமருக்கு ஆசையோடு கை கொடுக்க, பிரதமர் அன்போடு யானையை தட்டிக் கொடுத்தார்.

publive-image

அதன்பின்னர், ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பாகன் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். அவர்கள் வளர்த்து வந்த யானை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டதோடு, அவர்களுடன் சேர்ந்து யானைகளுக்கு உணவளித்தார். மேலும், யானைகள் குறித்தும், யானை வளர்ப்பு, அவர்கள் எத்தனை யானைகள் வளர்த்துள்ளனர், அவர்களின் வாழ்வாதாரம், தினசரி நடவடிக்கைகள் என்ன போன்ற தகவல்களையும் பிரதமர் கேட்டறிந்தார். பின்னர் பொம்மன் – பெள்ளி தம்பதியிடம் உரையாடிய பிரதமர் மோடி, இருவரையும் டெல்லிக்கு வர அழைப்பு விடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Elephant Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment