Coronavirus: சீர்காழியில் 45 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் குணமடைந்து வீடு திரும்பியபோது, வரவேற்பு ஊர்வலம் நடத்திய அந்த நபரின் நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரசவத்திற்கு சென்ற இஸ்லாமியப் பெண்ணை திருப்பி அனுப்பிய மருத்துவமனை: திருப்பூர் ஆட்சியரிடம் புகார்
நோயாளியைத் தவிர, இதில் சம்பந்தப் பட்ட அனைத்து நபர்களும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தப்லீஹி ஜமாஅத் மாநாட்டில் இருந்து திரும்பியவுடன் கொரோனா பாஸிட்டிவ் இருப்பதைக் கண்டறிந்த அந்த நபர், குணமடைந்த பின்னர் சனிக்கிழமை வீடு திரும்பினார்.
தகவல்களின் படி, அவர் ஒரு தனியார் வாகனத்தில் சீர்காழிக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மசூதியில் ஜமாஅத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர். சால்வை போர்த்தி, அவருடன் படங்களை எடுத்துக் கொண்டனர். பின்னர், அவர்கள் அந்த நபரை சில நூறு மீட்டர் தூரத்திற்கு, பேரணியாக அழைத்துச் சென்று, அவரது வீட்டை அடையும் வரை கோஷங்களை எழுப்பியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர்கள் அந்த நபர் மற்றும் அந்நிகழ்வோடு தொடர்புடையவர்கள் மீது சீர்காழி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அந்த நபர் இரண்டு வாரங்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அந்த நபரை இன்னும் காவலில் எடுக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
நதியா மகள்களா? தங்கைகளா?: வைரலாகும் புகைப்படம் உள்ளே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”