பொள்ளாச்சியில் அருகே நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் பட்டாக்கத்தியால் பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டும் மர்ம நபர்களின் பரபரப்பு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு வந்துள்ளது. இதனையடுத்து பங்க் ஊழியர்கள் அந்த காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கேட்டுள்ளனர். தொடர்ந்து காரில் பயணித்த மர்ம நபர் பட்டா கத்தியை எடுத்து பங்க் ஊழியரை தாக்க முயற்சி செய்துள்ளார். மர்ம கும்பல்களிடம் இருந்து தப்பிய ஊழியர், அவரை பிடிக்க முற்பட்ட போது மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இதையும் படியுங்கள்: போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடி கால் உடைந்த நிலையில் கைது
இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெரிய பட்டாக்கத்தியுடன் உலா வரும் ரவுடி கும்பலால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil