Advertisment

'பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்' - பொள்ளாச்சி ஜெயராமன்

Pollachi Sexual Abuse : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi Sexual Harassment Case

Pollachi Sexual Harassment Case

Pollachi Sexual Abuse : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியாகும் பல திடுக்கிடும் தகவல்கள் தமிழகத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ளது. வீடியோ காட்டி பணம் பறிப்பதும், அல்லது பாலியல் தேவைகளுக்கு பெண்களை பயன்படுத்துவதும் தான் இவர்களின் கொடூர நடத்தை என்ற திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: 'அவதூறு பரப்புகிறார்கள்; விசாரணைக்கு தயார்' - பொள்ளாச்சி ஜெயராமன்!

அந்த கும்பலை சேர்ந்த சபரிராஜன், (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pollachi Sexual Abuse : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

இந்த வீடியோவை பார்த்த பலரும் நெஞ்சை நிலைகுலையச் செய்துள்ளதாக கூறி தங்களின் கோபத்தை நெருப்பாக உமிழ்கின்றனர்.

இதனிடையே பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ் என்பவர், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் அவர் நீக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சியினர் சதி செய்வதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

07:00  PM - 'பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், எத்தனை பேராக இருந்தாலும் அவர்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்' என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

06:30 PM - பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை அரபு நாடுகளைப் போல் மக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும் என பாடலாசிரியர் விஜய் தெரிவித்துள்ளார்.

05:55 PM - கனிமொழி கைது

பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர்.

05:15 PM - பொள்ளாச்சியில் கனிமொழி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

04:45 PM - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

04:20 PM - பேரணி சென்ற மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகிகள், கோவை மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களின் விவரங்களை நாம் வெளியிடாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்" என்றனர்.

04:00 PM - மக்கள் நீதி மய்யம் பேரணி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவையில் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சினேகன், ஸ்ரீப்ரியா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். பேரணியின் முடிவில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என துணை ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.

03:40 PM - நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை; தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன" என ஐகோர்ட் மதுரை கிளை வருத்தம் தெரிவித்துள்ளது.

03:00 PM - பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு கண்டனம் தெரிவித்து திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

02:10 PM - கோவை ஆட்சியர் எச்சரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை திசைத் திருப்பும் நோக்கில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, சட்டத்திற்கு உட்பட்ட போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக, வழக்கு தொடுத்த குடும்பத்தாருக்கு யாரேனும் தொந்தரவு கொடுத்தால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

01:35 PM : பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

01:13 PM : கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

டிஜிபியுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "இங்கு புகாரளிக்க வரவில்லை. எங்கள் பதற்றத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வந்தோம். தவிர, எங்கள் கட்சிக்கு மைலேஜ் ஏற்றிக் கொள்ள டிஜிபியை சந்திக்கவில்லை. காவல்துறையின் நடவடிக்கையில் எங்களுக்கு சில மாறுப்பட்ட கருத்து இருந்ததையும் டிஜிபியிடம் கூறியிருக்கிறோம்" என்றார்.

1.00 PM : டிஜிபி-யுடன் கமல் ஹாசன் சந்திப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் கமல் ஹாசன் புகார் மனு அளித்துள்ளார்.

12.50 PM : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும் கடும் தண்டனை வழங்க கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

12.25 PM : ஜாமீன் மறுப்பு

பொள்ளாச்சி கொடூரத்தில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வீடியோ பதிவுகள் ஆய்வு முடிந்த பிறகு விசாரணை நடைபெறும் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

12.10 PM : ஜாமீன் மறுப்பு

முக்கிய நபரான திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது பொள்ளாச்சி நீதிமன்றம்.

12.00 PM : இயக்குநர் கார்த்திக் தங்கவேல் ஆவேசம்

வாய்ப்பு கிடைத்தால் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது பெற்றோர் முன்பே எரிப்பேன் என பாலியல் வன்கொடுமை குறித்து பேசும் அடங்க மறு படத்தின் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

10.30 AM : கே.பாலகிருஷ்ணன் கருத்து

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் வழக்கை காவல்துறை மிகச்சரியாக கையாளுமா என்கிற சந்தேகம் எழுகிறது என மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

10.00 AM : கோவை எஸ்.பி பரபரப்பு பேட்டி

இந்த வழக்கு குறித்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “இந்த கும்பல் பணம் பறித்துள்ளது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்தால், கூடுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும். 100 சதவிகிதம் இதில் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை. கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்குத்தான் இதில் தொடர்பிருக்கிறது. திருநாவுக்கரசு கல்லூரிப் பருவத்திலிருந்தே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு, சேலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால், எத்தனை பெண்கள் என்பது குறித்து விவரங்கள் இல்லை.” எனக் கூறினார்.

9.30 AM : அரசியல் தலைவர்கள் கண்டனம்

இந்த வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக அன்புமணி ராமதாஸ் உட்பட பல அரையல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

9.00 AM : பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றது. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. திமுக.தான் அதற்கு காரணம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். மேலும், அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலர் சிங்கை ராமச்சந்திரன், டி.ஜி.பி அலுவலகத்திலுள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார். புகார் அளிக்கும்போது பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் சென்றார். புகாரின் அடிப்படையில், CCB Cr.No.94/19 U/s 153,505(1),(b),(c), 469,471 IPCல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

8.30 AM : குண்டர் சட்டம்

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

Coimbatore Pollachi Pollachi Jayaraman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment