Advertisment

Pollachi Issue: ‘ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்’ வைரல் ஆடியோ

pollachi incident in tamil: ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். யாரோ சிலரை காப்பாற்ற இப்படியொரு ஆடியோ வெளியிடப்பட்டதா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi Issue, pollachi incident in tamil, பொள்ளாச்சி செய்திகள்

Pollachi Issue, pollachi incident in tamil, பொள்ளாச்சி செய்திகள்

Pollachi sexual assault case complainant audio Goes viral: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார்தாரரான பெண் வெளியிட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து போலீஸார் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

Advertisment

பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் நட்பு மூலமாக மாணவிகள், இளம் பெண்களை வளைத்து பாலியல் தொல்லை கொடுத்த கும்பல் சிக்கியது. இந்த கும்பலால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்படி கும்பலில் கையில் சிக்கிய இளம்பெண்கள் கதறும் ஆடியோ, வீடியோக் காட்சிகள் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

 pollachi rapist news, pollachi sexual assault case, pollachi video online

இந்தக் கும்பலை தூக்கில் போடவேண்டும் என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையே இந்த விவகாரம் அம்பலத்திற்கு வரக் காரணம், கல்லூரி மாணவி ஒருவர் தைரியமாக முன்வந்து இந்தக் கும்பலுக்கு எதிராக கொடுத்த புகார்தான்!

Read More: அரசியல் பின்னணியா? நடந்தது என்ன? பொள்ளாச்சி கொடூரம்

‘பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்பவன் என்னோடு ஃபேஸ்புக் மூலமாக நட்பாகி காலப்போக்கில் காதலிப்பதாகச் சொன்னான். நானும் நம்பி காதலித்தேன். பிறகொருநாள் நண்பர்களோடு `அவுட்டிங்’ போகலாம் என்றுகூறி திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரோடு என்னையும் அழைத்துச் சென்றான்.

Read More: Pollachi Sexual Abuse Case Live Updates: போராட்டக் களமாக மாறிய பொள்ளாச்சி... ஒன்று சேர்ந்த மாணவர்கள் கூட்டம்

சென்ற இடத்தில் நான்குபேரும் சேர்ந்து, என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். செல்போனில் ஆபாசப் படம் எடுத்துவிட்டனர். 4 பேர் இருந்ததால் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் அணிந்திருந்த செயினையும் பறித்துக்கொண்டது மட்டுமல்லாமல் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்’ என்று கடந்த 24-ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி புகார் கொடுத்தார்.

அந்தப் புகார் அடிப்படையிலேயே திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடியோ, வீடியோக்கள் மூலமாக இதில் பெருமளவில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பலருக்கு இந்த அட்டூழியத்தில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க - Pollachi Sexual Assault Live Updates: பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கவர்னர் அனுமதி

இதற்கிடையே புகார்தாரரான அந்த மாணவி வெளியிட்டதாக கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த ஆடியோ வாசகங்கள் இங்கே...

‘எல்லோருக்கும் வணக்கம். நான், பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பேசுகிறேன். சபரி, சதீஷ், வசந்த், திருநாவுக்கரசு இவங்கமேல கம்ப்ளைன்ட் கொடுத்தது நான்தான். காரணம், இனிமேல் எந்த ஒரு பெண்ணும் என்னைப் போல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டும்தான்.

எங்க குடும்ப நண்பரான மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒருத்தங்ககிட்ட இதைப்பற்றி நாங்க பேசியிருந்தோம். அவர், ஆளும்கட்சி பிரமுகரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அதற்கடுத்த நாளே எங்களை அவங்ககிட்ட கூட்டிட்டுப் போனாங்க. நடந்த எல்லாவற்றையுமே நாங்கள் சொன்னோம். அவர், உடனடியா எஸ்.பி பாண்டியராஜன் மற்றும் டி.எஸ்.பி ஜெயராமன் ஆகியோரிடம் பேசி ஆக்‌ஷன் எடுக்கச் சொல்லியிருந்தார்.

அன்று நைட்டே திருநாவுக்கரசைத் தவிர மற்ற எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதற்கடுத்த கொஞ்ச நாளிலேயே திருநாவுக்கரசையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ஆனால், இதை சிலர் அரசியலாக்கிட்டாங்க.

எனக்கு அந்த ஆளும்கட்சி பிரமுகர் கொடுத்த வாக்கு என்னவென்றால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் நான்தான் என்பதும் என் குடும்பத்தைப் பற்றிய தகவலும் கண்டிப்பாக வெளிவராது என்று சொல்லியிருந்தார். இந்த வழக்கைத் தொடர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்போ தேர்தல் தேதி அறிவித்தார்களோ... உடனே வந்து என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி வெளியில் கொண்டுவந்து அரசியலாக்கிட்டாங்க.

இந்த மாதிரி சூழலில், பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். இதன் மூலமா தப்பு செஞ்சவங்க கண்டிப்பா தப்பிச்சிருவாங்க. இந்த வழக்கில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவங்க யாருமே இல்லை. அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் யாரும் இல்லை. அதனால, இதை அரசியல் ஆக்காமல், தயவுசெய்து இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு எல்லோர்கிட்டேயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

வதந்தி பரப்புகிற யார்கிட்டயாவது ஆதாரம் இருந்தால், அதைக் கொடுத்து உடனடியா இதற்கு ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்று எல்லோர்கிட்டயும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தினால் நானும் எனது குடும்பமும் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்.

இந்த விஷயத்தில், முதன் முதலாக உதவிசெய்தது அந்த ஆளும்கட்சிப் பிரமுகர்தான். அவருக்கு ரொம்ப நன்றி. தேவைப்பட்டால், இந்த செய்தியை மீடியா வரைக்கும் கொண்டுபோவோம். இந்த நாலு பேர் செஞ்ச கொடுமையைவிட, அரசியல் ஆதாயத்துக்காக சிலபேர் செய்கிற செயல் என்னையும் என் குடும்பத்தையும் தற்கொலை செய்யத் தூண்டுகிறது.

இதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த யாருமே எங்களுக்கு ஹெல்ப் பண்ண வரலை. மலுமிச்சம்பட்டியைச் சார்ந்த பிரமுகர் மட்டும்தான் முன்வந்து உதவி செய்தவர்’ என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார், மேற்படி பெண்.

எனினும் இந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். யாரோ சிலரை காப்பாற்ற இப்படியொரு ஆடியோ வெளியிடப்பட்டதா? என்கிற கோணத்திலும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். உரிய விசாரணையில்தான் இதன் உண்மைத்தன்மை புலப்படும்.

 

Coimbatore Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment