Pollachi Saxual Asault case: பொள்ளாச்சி ‘கேங் ரேப்’ விவகாரம் தமிழகத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அட்டூழியம் செய்திருப்பது அம்பலம் ஆகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தவண்ணம் இருக்கிறது.
கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரான பொள்ளாச்சியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் பாலியல் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஆரம்பம், முகநூல் நட்பு மூலமாக ஒரு இளம்பெண்ணை வரவழைத்து அவரை ஒரு கும்பல் ஆபாசப் படம் எடுத்ததாக தகவல் வெளியானது.
Pollachi Sexual Abuse Live Updates : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு லைவ்
அந்தப் பெண்ணிடன் நகைகளை பறித்துக் கொண்டதாகவும் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/a814-300x217.jpg)
இந்த விவகாரத்தில் திருநாவுக்கரசு என்பவனை திருப்பதியில் போலீஸார் கைது செய்தனர். மேலும் நகை மற்றும் பணம் பறித்ததாக சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அப்பாவிப் பெண்கள் இருவரை மிரட்டி எடுத்த இரண்டு வீடியோக்களை அந்தக் கும்பல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன.
Read More: பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரம்! 'பெண்ணைப் பெற்றவர்களுக்கு அடிவயிறு கலங்கும்'! - பொதுமக்கள் ஆவேசம்
பொள்ளாச்சி கூட்டு பாலியியல் வல்லுறவு வழக்கில் என்னதான் நடக்கிறது? விசாரணை அதிகாரிகள் தரப்பில் இது குறித்து விசாரித்தபோது, ‘திருநாவுக்கரசுவிடம் விசாரித்தபோது அதிர்வலைகளை ஏற்படுத்தும் முக்கிய தகவல்களை தெரிவித்தார். ஆபாச வீடியோக்கள், படங்கள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.’ என்றார்.
Read More: Pollachi Issue: ‘ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்’ வைரல் ஆடியோ
இதற்கிடையே ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரின் மகனுக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்ற தகவல் வெளியானது. இது, கொங்கு மண்டலத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதேசமயம் தேர்தலுக்காக இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாக சம்பந்தப்பட்ட மூத்த நிர்வாகி தரப்பில் பதில் கூறப்படுகிறது.
Read More: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: அ.தி.மு.க.வில் இருந்து நாகராஜ் நீக்கம்!
இந்த வழக்கின் மூலப் புள்ளியான திருநாவுக்கரசுவின் ஊர், ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையம். திருநாவுக்கரசு குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி மாக்கினாம்பட்டியில் வசிக்கிறார்கள். இதனால் சின்னம்பம்பாளையத்தில் உள்ள வீட்டில்தான் வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசு குடும்பம், வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்வதாக தெரிகிறது. இவர்களுக்கு நெருக்கமான சிலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். திருநாவுக்கரசுவின் நட்பு வட்டாரத்திலும் அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக தெரிகிறது.
Read More: பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: 'அவதூறு பரப்புகிறார்கள்; விசாரணைக்கு தயார்' - பொள்ளாச்சி ஜெயராமன்!
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு திருநாவுக்கரசு எம்.பி.ஏ. படித்ததாக தெரிய வந்திருக்கிறது. அப்போது மாணவிகளுடன் ஏற்பட்ட நட்பு, நெருக்கமாக இருந்து வீடியோ எடுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. தவிர, மொத்தம் 150-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதற்கிடையே வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாகராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கியப் பிரமுகர் ஒருவரின் மகன், அவரின் நண்பர்கள், வீடியோக்கள் ஒரு தரப்பினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இன்னொரு வீடியோவில் கட்சியின் சீனியர் ஒருவர் இருக்கிறார். அவர்கள் குறித்த பட்டியலை தேர்தல் சமயத்தில் வெளியிட எதிர் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.
கல்லூரி மாணவி ஒருவர் தைரியமாக இந்த கும்பல் மீது பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தற்போது அந்த மாணவிக்கும் மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
திருநாவுக்கரசு மற்றும் இந்தக் கும்பலின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்களில் உள்ள பெண்களிடம் ரகசியமாக விசாரித்தால் முழு உண்மைகளும் தெரிய வரும். இந்தக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்தவண்ணம் உள்ளன.