Advertisment

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு

பிப்ரவரி 24 மற்றும் 26ம் தேதி பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi Sexual Harassment Case

Pollachi Sexual Harassment Case

Pollachi Sexual Harassment Case : பொள்ளாச்சி மற்றுமல்லாமல் தமிழகத்தில் அதிக அளவு அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி வழக்கில் முக்கிய்மான 8 நபர்கள் மீது, இரண்டு வழக்குகளின் வீழ் முதல் தகவல் அறிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் நட்பு பாராட்டி, பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி வந்துள்ளது ஒரு கும்பல்.  அதில் இருந்து தப்பித்து வந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பிறகு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்த வழக்குகள் சி.பி.ஐக்கு மார்ச் மாதம் 13ம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று, திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், செந்தில், பாபு, மணி உள்ளிட்ட எட்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் எஃப்.ஐ.ஆர் ஆனது பிப்ரவரி 24ம் தேதி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்டதாகும். திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் மற்றும் வசந்தக்குமார் இளம்பெண் ஒருவரிடம் தவறாக முற்பட்டதன் காரணமாகவும், அவரிடம் இருந்து தங்க நகை பறிக்கப்பட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இரண்டாவது வழக்கானது, பிப்ரவரி 26ம் தேதி, வழக்கு கொடுத்த பெண்ணின் அண்ணனை ஆள்வைத்து அடித்ததிற்காக பதியப்பட்ட வழக்காகும். இவ்விரண்டு வழக்குகளையும் அடிப்படையாக கொண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளது சி.பி.ஐ.

மேலும் படிக்க : பொள்ளாச்சி வழக்கை விசாரித்த அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்… காத்திருப்போர் பட்டியலில் எஸ்.பி. பாண்டியராஜன்

Coimbatore Pollachi Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment