By: WebDesk
Updated: December 25, 2019, 01:09:14 AM
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துகொண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி அவ்விழாவில் கலந்து கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
கேரளாவைச் சேர்ந்த ரபீஹா அப்துரேஹிம் மாஸ் கம்யூனிகேஷனில் முதுகலைப் படிப்பை முடித்தவர். இவர், முன்னதாக தனக்கு கொடுக்கப்பட்ட தங்க பதக்கத்தை குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு தனது ஆதரவை அளிக்கும் வகையில் வாங்க மறுப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஜனாதிபதி வருகை தருவதற்கு முன்பாக அரங்கத்தில் இருந்த ரபீஹா அப்துரேஹித்தை போலிஸ் உயர் அதிகாரிகள் அரங்கத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
ஜனாதிபதி வெளியேறிய பின்னர் தான், பட்டமளிப்பு விழா அரங்கத்தில் தன்னை அனுமதித்ததாகவும், போலிஸ் அதிகாரிகள் வெளியேறச் சொன்னதற்கான உண்மையான காரணம் தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி வளாகத்தை விட்டு வெளியேறியபின், பல்கலைக்கழக அதிகாரி மற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் ஒப்படைத்தார். ரபீஹா அப்துரேஹிம் பட்டப்படிப்பு சான்றிதழை மட்டும் பெற்றதாகவும், குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.