Pongal 2020 Chennai colleges celebrations images gallery : புதன் கிழமை தமிழகம் முழுவதும் பொங்கல் துவங்க உள்ளது. ஆனாலும் பொங்கல் கொண்டாட்டங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே துவங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து ஏரியாக்களிலும் புதுப்பானையும், பச்சரிசியும், வெல்லமுமாய் தித்திக்கிறது. எப்போதும் போல் இந்த ஆண்டும் சென்னை கல்லூரிகளில் ஆட்டமும் பாட்டமுமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.! கேரள மாநிலத்தின் செண்ட மேளம், தமிழர்களின் தேவராட்டம், சிலம்பம், கரகாட்டம், மற்றும் பறையாட்டம் என வெளுத்து வாங்கினார்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்.
வீதி விருது விழா என்று பலராலும் அழைக்கப்படும் இந்த விழாவை காண மாணவர்கள், பேராசியர்கள், ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர். இது செல்லக்குட்டிகளின் சிலம்பாட்டம்
ஒயிலாக நின்று கரகம் ஆடும் பெண். இவர் ஆட்டத்தை அங்கு கூடியிருந்தவர்கள் கண் கொட்டாமல் ரசித்தனர்.
அம்மன் மற்றும் இதர காவல் தெய்வங்கள் போன்று வேடமணிந்து நிற்கும் மாணவர்கள்! லயோலா கல்லூரியின் மற்றும் இந்திய சுற்றுலாத்துறை நடத்தும் வீதி விருது விழாவில் இந்த ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் நடைபெற்றது.