களத்தில் காளைகளை சந்திக்க தயாரா? – ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், தேதி முழு விவரம்

Jallikattu: ஸ்மாா்ட் ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை மற்றும் தமிழ்நாடு பராமரிப்புத்துறையைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் வழங்கிய காளை அடையாளச் சான்று ஆகிய 3 ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வரவேண்டும்

pongal 2020 ponjal jallikattu dates - களத்தில் காளைகளை சந்திக்க தயாரா? - ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் முழு விவரம்
pongal 2020 ponjal jallikattu dates – களத்தில் காளைகளை சந்திக்க தயாரா? – ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் முழு விவரம்

Pongal 2020: பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீங்கினாலும் ஆண்டுதோறும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களிலுள்ள 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து அரசிதழில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோயம்பேடு ட்ராபிக் : ஈஸியாக ரீச்சாக இதுதான் வழி

இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 1960ம் ஆண்டு விலங்குகள் கொடுமைப்படுத்துதல் (prevention of cruelty to animals, 1960) தடுப்பு சட்ட 2ஆவது பிரிவில், 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்மூலம் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜனவரி 16 முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது (Image Credit - Maheen Hassan)
அந்தவகையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜனவரி 16 முதல் 31ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது (Image Credit – Maheen Hassan)

இதேபோன்று சூரியூர், கருங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளித்தலை வட்டத்துக்கு உட்பட்ட ராச்சாண்டார் திருமலை கிராமம், மதுரை மாவட்டத்தில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலும் திருச்சி மாவட்டத்தில் சூரியூர், ஆவரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி மற்றும் கருங்குளம் ஆகிய 4 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி (Image Credit - Maheen Hassan)
குளித்தலை வட்டத்துக்கு உட்பட்ட ராச்சாண்டார் திருமலை கிராமம், மதுரை மாவட்டத்தில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலும் திருச்சி மாவட்டத்தில் சூரியூர், ஆவரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி மற்றும் கருங்குளம் ஆகிய 4 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி (Image Credit – Maheen Hassan)
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 இல் பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது (Image Credit - Maheen Hassan)
மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 இல் பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது (Image Credit – Maheen Hassan)
ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூா் கிராமங்களில் தலா 700 காளைகளும், பாலமேடு கிராமத்தில் 650 காளைகளும் பங்கேற்கவுள்ளதாக ஜல்லிக்கட்டு அமைப்புக்குழு நிா்ணயித்துள்ளன. இதையடுத்து, திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை 9 மணி முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பதிவு செய்து கொள்ளலாம். (Image Credit - Maheen Hassan)
ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூா் கிராமங்களில் தலா 700 காளைகளும், பாலமேடு கிராமத்தில் 650 காளைகளும் பங்கேற்கவுள்ளதாக ஜல்லிக்கட்டு அமைப்புக்குழு நிா்ணயித்துள்ளன. இதையடுத்து, திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை 9 மணி முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பதிவு செய்து கொள்ளலாம். (Image Credit – Maheen Hassan)
அவனியபுரத்தில் உள்ள கால்நடை மருந்தகத்திலும், பாலமேட்டில் அரசினா் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் காளைகள் பதிவு நடைபெறும்.
அவனியபுரத்தில் உள்ள கால்நடை மருந்தகத்திலும், பாலமேட்டில் அரசினா் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அலங்காநல்லூரில் ஊராட்சி ஒன்றிய அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் காளைகள் பதிவு நடைபெறும். (Image Credit – Maheen Hassan)
காளைகளை பதிவு செய்ய, அதன் உரிமையாளா்கள் ஸ்மாா்ட் ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை மற்றும் தமிழ்நாடு பராமரிப்புத்துறையைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் வழங்கிய காளை அடையாளச் சான்று ஆகிய 3 ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வரவேண்டு என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் (Image Credit - Maheen Hassan)
காளைகளை பதிவு செய்ய, அதன் உரிமையாளா்கள் ஸ்மாா்ட் ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை மற்றும் தமிழ்நாடு பராமரிப்புத்துறையைச் சோ்ந்த கால்நடை மருத்துவா் வழங்கிய காளை அடையாளச் சான்று ஆகிய 3 ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் வரவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் (Image Credit – Maheen Hassan)
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. நிகழாண்டுக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு வரும் ஜன. 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், விராலிமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. நிகழாண்டுக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு வரும் ஜன. 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது (Image Credit – Maheen Hassan)

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பணிகளை அமைச்சா் சி. விஜயபாஸ்கருடன் இருந்து செய்துவந்த அவரது தனி உதவியாளா் ஆா். வெங்கடேசன் சனிக்கிழமை நள்ளிரவில் காா் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக ஜல்லிக்கட்டு பேரவையினா் அறிவித்துள்ளனா்.

பொங்கல் 2020 : அந்த ரெண்டு நாள் லீவ் இல்லையாமே! சோகத்தில் அரசு ஊழியர்கள்!

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pongal 2020 ponjal jallikattu dates

Next Story
போகிப்பண்டிகை – இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள் -புது மனிதனாக உருமாறும் நாள்pongal, pongal 2020, bhogi 2020, bhogi festival, bhogi date, bhogi puja timing, lord indra, bhogi pongal date, bhogi festival hisotry, bhogi, bhogi festival 2020, bhogi festival 2019, bhogi meaning, bhogi pongal 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com