மறைந்த கருணாநிதிக்கு வீட்டிலிருந்தே மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் குழந்தைகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jeyam ravi sons, கருணாநிதி சமாதி

jeyam ravi sons, கருணாநிதி சமாதி

திமுக தலைவர் கருணாநிதி சமாதி மெரினாவில் அடக்கம் செய்யும் நேரத்தில் வீட்டிலிருந்தே பிரபல நடிகரின் இரண்டு குழந்தைகளும் மரியாதை செய்தது வைரலாகி வருகிறது. கருணாநிதி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றாலும் வீட்டிலிருந்தே மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் குழந்தைகள்.

Advertisment

கருணாநிதி சமாதி : இறுதி அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்:

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, சினிமா பிரபலங்கள் பலரும், ராஜாஜி ஹாலுக்கு சென்று மரியாதை செலுத்தினர். மேலும் சிலர் மெரினாவிற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த இரண்டு இடங்களுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

மறைந்த கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா

அந்த வகையில், பிரபல நடிகர் ஜெயம் ரவியின் மகன்கள் இருவரும் சிறு குழந்தைகள் என்பதால் அவர்களால் நேராக சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. இருப்பினும், கருணாநிதியின் நல்லடக்கம் சமயத்தில் அரசு மரியாதை செலுத்திய நேரம் இருவரும் சல்யூட் அடித்து மரியாதை மற்றும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Advertisment
Advertisements
August 2018

இந்த புகைப்படத்தை நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்த தலைமுறைகளையும் கருணாநிதி சென்றடைந்திருக்கிறார் என்பதன் உதாரணமாக இந்த புகைப்படம் இருக்கிறது என்று நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

Dmk Jeyam Ravi Marina Beach M Karunanidhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: