சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிச.14ஆம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் இன்று சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இந்த நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தே.மு.தி.க-வில் புதிய மாற்றம்: பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“