Advertisment

ஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் - மாபியா அட்டகாசம்

Hi guys : மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
priya bhavani shankar, karthick naren, mafia, madurai government hospital, treatment, chennai, chennai corporation, thajavur, tanjore big temple, kumbhabishekam

priya bhavani shankar, karthick naren, mafia, madurai government hospital, treatment, chennai, chennai corporation, thajavur, tanjore big temple, kumbhabishekam

ஹாய் பிரெண்ட்ஸ், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றம் பெற்று வரும் நாம், நமது அன்றாட வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால், பல்வேறு இடர்களை சந்தித்து வருகிறோம்.

Advertisment

வாங்க, அது குறித்த சிந்தனையோட நாம இன்றைய நிகழ்ச்சிக்கு போயிறலாம்...

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாபியா படத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளார்களாம். இனிமே எல்லாரும் என்னை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக போலீஸ் பவானி சங்கர் என்று தான் அழைப்பாங்கனு பிரியா சொல்லி வர்றாங்களாம்..

பெயரே டெரரா இருக்கே...

ஹாய் கைய்ஸ் : உண்மையான காதல் மன்னன் இவர்தானோ.... திருமணம் செய்ய போட்டி போடும் பெண்கள்

ஹாய் கைய்ஸ் : பிறக்கும்போதே கொரோனா எமனை வென்ற உமன்

மதுரை அரசு மருத்துவமனையில் மருந்தில்லா சிகிச்சை அளிக்கும் இயற்கை மற்றும் யோகா மருத்துவ வாழ்வியல் மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இங்கு உடல் வலி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யோகா, அக்குபஞ்சர், உணவு, மண், காந்தம், இயன்முறை, உபவாசம், மசாஜ் மற்றும் நீர், நறுமண, நிற, இயற்கை மூலிகை சிகிச்சை காலை 8:00 முதல் பகல் 2:00 மணிவரை அளிக்கப்படுகிறது.

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...

தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை, 9:23 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், 'ஓம் நமசிவாய' என, பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷமிட்டனர்.

ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய...

சென்னை மாநகராட்சியில், நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி, இதுவரை, 810 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சொத்து வரியின்படி, 2019 - 20ம் நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இணைய தளம் உட்பட அனைத்திலும், சொத்து வரி குறித்த குறிப்புகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, 810 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மார்ச், 31ம் தேதி வரை, சொத்து வரி செலுத்த கால அவகாசம் உள்ளதால், 1,000 கோடி ரூபாய் வரை வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Thanjavur Priya Bhavani Shankar Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment