/tamil-ie/media/media_files/uploads/2020/04/maxresdefault.jpg)
Psychiatrist Dr Shalini talks about corona quarantine stress on IET Live
வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்கள். சமூக தொடர்பு இல்லாமல் தொடர்ந்து ஏற்படும் மன அழுத்தங்கள். தனிமையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் குழந்தைகள். மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு நிகரானது. உங்களின் மனதை நலமுடன் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வருகிறார் மனநல மருத்துவர் ஷாலினி. உங்களின் கேள்விகளுடன் நாளை தயாராக இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
நாளை மாலை (04/04/2020) சரியாக 6 மணிக்கு உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இணைகிறார். உங்களின் உறவினர்களை, பெற்றோர்களை, நண்பர்களை மன அழுத்தத்தில் இருந்து மேடேற்றி, இந்த குவாரண்டைன் காலத்தில் தனிமையை உணராமல் இருப்பது எப்படி என்று நமக்கு கூற உள்ள்ளார் ஷாலின்.
மேலும் படிக்க : 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது?
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். எங்களின் முகநூல் பக்கத்திற்கு செல்லுங்கள். ஒரு லைக், ஒரு ஃபாலோ, பின்னர் நோட்டிஃபிகேஷனை ஆன் செய்யுங்கள். நாளை மீண்டும் ஒரு ரிமைன்டர் தருகின்றோம். சரியான நேரத்தில் உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
எங்களின் முகநூல் பக்கத்தின் இணைப்பு : https://www.facebook.com/IETamil/
நேற்று (02/04/2020) நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன், எங்களுடன் இணைந்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசும், காவல்துறையும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து பேசினார். அது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள : நெருக்கடியான கால கட்டத்தில் இப்போது உதவாவிட்டால் வேறு எப்போது? – நெல்லை டி.சி.பி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.