/tamil-ie/media/media_files/uploads/2020/03/cats-29.jpg)
Puducherry MLA Vaiyapuri Manikandan prepares food for PHC staffs
Puducherry MLA Vaiyapuri Manikandan prepares food for PHC staffs : மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் ஆகியோர் தொடர்ந்து மக்கள் நலப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுள்ளேயே முடங்கியுள்ளனர். கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்க கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள், மற்றும் செவிலியர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதுவை எம்.எல்.ஏ.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுவோர், காவல்துறையினர், சாலைகளில் வசிப்போர்கள் ஆகியோர்களின் தேவையை அறிந்து கொண்ட முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் தன்னுடைய கார் பார்க்கிங் ஏரியாவை தற்காலிக சமையல்கூடமாக மாற்றியுள்ளார். தன்னுடைய உதவியாளர்களுடன் சேர்ந்து தேவையானவர்களுக்கான உணவினை தயாரித்து நேரடியாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு வழங்கியும் உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.