புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (85) என்ற முதியவர் தன் மகள் சுந்தரம்பாளுக்கு ஒவ்வொரு பொங்கலின் போதும் சீர்வரிசை கொடுக்கத் தவறுவதில்லை. சைக்கிளிலேயே, அதுவும், பொங்கல் கரும்பைத் தலையில் சுமந்தவாறே வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தூரம் சைக்கிளில் கொண்டு சென்று சீர்வரிசைகளை மகளுக்குக் கொடுத்து நெகிழ வைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:சீறிய காளைகள்: ஆயுதப்படை காவலர் உள்பட 19 பேர் காயம்
இதுகுறித்து பேசிய முதியவர் செல்லத்துரை, “வருஷம் தவறாம பொங்கல் அன்னைக்கு மொத நாளு சீர்வரிசையைக் கொண்டுபோய் சேர்த்திடுவேன், இப்ப இல்லை, எனக்கு விவரம் தெரிஞ்சதில் இருந்தே சைக்கிள்ல தான் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு நேத்து இல்ல, ஆண்டாண்டு காலமா கொண்டு போயிட்டு இருக்கிறதால, அதுவே பழகிடுச்சு.
வெல்லம், பச்சரிசி, முந்திரி, மஞ்சள்கொத்து, கரும்புன்னு கொஞ்சம் பொங்க சீர்தான் எடுத்துக்கிட்டு போறேன். எனக்காக மகளும், பேரப் பிள்ளைங்களும் ஆவலோட காத்திருப்பாங்க. ரொம்ப மகிழ்ச்சியாகிடுவாங்க. அந்த உற்சாகத்துலதான் தொடர்ந்து கொண்டு போய்க்கிட்டு இருக்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil