திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து உணர்ச்சி மிகு பதிவை வெளியிட்டிருக்கிறார் நடிகை ராதிகா.
ராதிகா ட்வீட்:
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்றுடன் 11வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 24 மணிநேரம் கழித்தே எதுவும் கூற முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிமிகு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராதிகாவுக்கும் திமுகவுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. ராதிகாவின் தந்தை பழங்கால நடிகர் எம்.ஆர். ராதா உயிருடன் இருந்த காலத்தில் அவர் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பு வைத்திருந்தார் அந்த நட்பு தலைமுறைகளை தாண்டியும் தொடர்ந்தது.
So disturbing to hear about @kalaignar89,my prayers for him and his family .
— Radikaa Sarathkumar (@realradikaa) 6 August 2018

இந்நிலையில் ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரின் உடல்நிலை குறித்து அறிந்து கவலையாக உள்ளது. அவருக்காகவும், அவரது குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தின் புரோபலை பக்கத்தை கருப்பாக மாற்றி, கவர் பேஜில் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்துள்ளார்.