’கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-ட்யூப் சேனலில், தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுப்படுத்தியதாக சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. கடந்த ஜனவரி 1-ம் தேதி பதிவிடப்பட்ட அந்த வீடியோவுக்கு எதிராக தற்போது எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலை கண்டித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் நாளுக்கு நாள் உயரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!
இது ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க, மறுபுறம் கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்திருக்கும் பெரியார் சிலை மீது நேற்று காலை காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த பெரியாரிய இயக்க தொண்டர்கள் அங்கு ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். காவி சாயம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது
No amount of hate can ever deface a giant. pic.twitter.com/Y5ZBNuCfl2
— Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2020
இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
கூடிய விரைவில் அனைவருக்கும் கொரோனா ஆன்டிபாடி டெஸ்ட்!
இந்நிலையில் தற்போது பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும், முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி தமிழில் ட்வீட் செய்துள்ளார். பெரியார் சிலை அவமதிப்பு குறித்த ஆங்கில நாளிதழின் செய்தியை பதிவிட்டு, “எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுலின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Rahul gandhi on periyar statue insult issue tamil tweet