Advertisment

Railway Budget 2019: தனியார் பங்களிப்புடன் புதிய ரயில்கள்; உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள்!

Indian Railway Budget 2019: ரயில்வே பட்ஜெட் 2019 அப்டேட்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Railway Budget 2020, Indian Rail Budget 2020

Railway Budget 2020, Indian Rail Budget 2020

Rail Budget 2019 Latest News: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் நடைமுறை, கடந்த 2017-ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அதன்படி, பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதால், டிக்கெட் விலை குறைக்கப்படுமா?, பிளாட் ஃபார்ம் டிக்கெட் விலை குறைக்கப்படுமா?, புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல், தமிழகத்திலுள்ள தென்மாவட்டங்களுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

மேலும் படிக்க - Budget 2019 லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

அதேசமயம், ரயில்வே துறையை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கருத்து தெரிவித்திருந்த எஸ்ஆர்எம்யூ தெற்கு ரயில்வே நிர்வாகி கன்னையா, "ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் மானியங்கள் நிறுத்தப்பட்டு விடும். இதனால் ரயில் போக்குவரத்தை நம்பி வாழும் சாமானிய மற்றும் அடித்தட்டு மக்கள், மிகவும் பாதிக்கப்படுவார்கள். உதாரணமாக ரூ.50 விலையுள்ள டிக்கெட் தனியார் மயமாக்கப்பட்டால் ரூ.100 வரை உயர்த்தப்பட்டு விடும். எப்படி விமானத்தில் பணவசதி படைத்தவர்கள் மட்டுமே செல்ல முடியுமோ, அது போல பணம் வைத்திருப்பவர்களே ரயில் பயணத்தை செய்ய முடியும். ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு ரயில் பயணம் என்பது கனவாகி விடும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே பட்ஜெட் குறித்து அனைத்து அப்டேட்டுகளையும் உடனுக்குடன் உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காண தொடர்ந்து இணைந்திருங்கள்...

01:10 PM - ரயில்வே பட்ஜெட்டில் தனியார் நுழைவே பிரதானம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே சார்ந்து அறிவிக்கப்பட்டிருக்கும் மிக முக்கிய அம்சமே, இந்திய ரயில்வேயில் தனியாரை களமிறக்கி இருப்பது தான். மற்றபடி, ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடும்படியான அறிவிப்புகள் இல்லை.

12:50 PM - ரயில்வே பட்ஜெட் 2019: பிரான்ஸுடன் கூட்டணி அமைக்கும் இந்தியன் ரயில்வே

ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட ஒரு நாளைக்கு முன்னதாக, பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியன் ரயில்வே, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களை அமைக்க, பிரான்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. பிரான்ஸுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, மாபெரும் உள்கட்டமைப்பை உருவாக்க, அந்நாடு 7 லட்சம் யூரோஸ் இந்தியாவுக்கு வழங்குகிறது.

12:30 PM - டிக்கெட் விலை அதிகரிக்கிறதா?

ரயில்வே பட்ஜெட் 2019ல் டிக்கெட் விலை அதிகரிப்பது தொடர்பாகவோ, மற்ற விலை உயர்வுகள் தொடர்பாகவோ எந்த அறிவிப்பும் இல்லை. டிக்கெட் விலைகளை அதிகரித்தால், அரசியல் ரீதியாக அதிக நெருக்கடி ஏற்படும் என்பதால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அது போன்ற அறிவுப்புகளை வெளியிட வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

12:15 PM - உள்கட்டமைப்பில் அதிக கவனம்

Railway, Highway, Waterway ஆகிய மூன்று துறைகளிலும் உள்கட்டமைப்பை அதிகரிக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அதிகளவு முதலீடு செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

11:45 AM - Make in India திட்டத்தின் கீழ் PPP செயல்பாடு

மக்கள் - தனியார் கூட்டு ஒத்துழைப்பு மூலம் ரயில்வே துறையில், புதிய தொழில் நுட்பம் உதவியுடன் உலகத் தரம் வாய்ந்த ரயில்களை உருவாக்க முடியும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த செயல்பாடு கொண்டுவரப்பட உள்ளது.

11:30 AM - 2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானங்கள் போன்றவை PPP எனப்படும் (Public-Private Partnership) மக்கள்-தனியார் கூட்டு ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment