தமிழகத்தில் அடுத்த நான்கு தினங்களுக்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையாலும், வெப்பச்சலனத்தாலும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: Chennai Weather: கன்னியாகுமரி - ஊட்டி மழை, சென்னையில் மேகமூட்டம்
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 25 வரை தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மேலும் படிக்க - மகிழ்ச்சியான செய்தி மக்களே... 4 நாட்களுக்கு தமிழகமே ஜில்லுன்னு இருக்க போது!
திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று(ஏப்.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் 40-50 kmph வேகத்தில் காற்று வீசும். இடியுடன் கூடிய கனமழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊட்டியில் 10 சென்டி மீட்டர் மழையும், ஓசூர், வால்பாறை, ஓமலூர், மேட்டூரில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், குன்னூர், பரமத்தி வேலூரில் தலா 6 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.