/tamil-ie/media/media_files/uploads/2019/08/EDD3BuSU8AA60zZ.jpg)
Rajinikanth brother sathyanarayanan rao hospitalized
Rajinikanth brother sathyanarayanan rao hospitalized : தர்பார் படப்பிடிப்பிற்காக மும்பையில் தங்கியிருந்த ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்றுள்ளார். ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணன் ராவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பெங்களூரு, சேஷாத்திரிபுரத்தில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய காலில் மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய வயது 77.
Rajinikanth brother sathyanarayanan rao hospitalized
அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவரை பார்ப்பதற்காக பெங்களூர் விரைந்தார் ரஜினி. சிறு வயதில் இருந்து ரஜினியின் வாழ்வில் முக்கிய நபராக செயல்பட்டவர் சத்யநாராயணன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக, சத்யநாரயணின் மனைவி கலாவதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
அங்கு அவருடைய சகோதரர் மிகவும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழுவுடன் தம்ஸ் அப் செய்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். மருத்துவர்களிடம், ரஜினி தன்னுடைய சகோதரர் உடல் நலம் குறித்து கேட்டு விசாரித்த ரஜினி நேற்றே மீண்டும் மும்பை விரைந்தார். தர்பார் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் படப்பிடிப்பு வேலைகளில் மும்பரமாக இயங்கி வருகின்றனர் படக்குழுவினர்.
மேலும் படிக்க : ரஜினியின் தர்பார் ஸ்டில்கள் மீண்டும் லீக் – திட்டமிட்டு வெளியிடப்படுகிறதா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.