Advertisment

”போலீஸ் பாதுகாப்பு போதும்”: ரஜினிகாந்த் வீட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதால், பெரியார் அமைப்புகள் ரஜினி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்து வந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajini

Superstar Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்துக்கு வழங்கப்பட்டு வந்த சுழற்சி முறை போலீஸ் பாதுகாப்பு, அவரது கோரிக்கைக்கு இணங்க விலக்கப்பட்டுள்ளது.

Advertisment

சலுகைகள் பிளஸ் இலவச விமான பயணம் – அசத்தும் இண்டிகோ

ரஜினிகாந்த் கார்டனில் வசிக்கிறார், அவரின் வீடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு அருகில் உள்ளது. துக்ளக் ஆண்டு விழாவில், பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதால், பெரியார் அமைப்புகள் ரஜினி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயற்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இல்லம் அமைந்து இருக்கக்கூடிய போயஸ் கார்டன் பகுதியில் அவருடைய இல்லம் அருகே சுழற்சி முறையில் 10 ஆயுதப்படை போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்நிலையில், “நாங்கள் சனிக்கிழமை ரஜினிகாந்துடன் சந்திப்பு நடத்தினோம். போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தான் உணர்ந்ததாக அவர் கூறினார். நாங்கள் நிலைமையை மதிப்பாய்வு செய்தோம், பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், நடிகரின் வீடு ரோந்துப் பணியின் போது கவர் செய்யப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஜனவரி 14-ஆம் தேதி, தமிழ் பத்திரிகை 'துக்ளக்' ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது "1971 ஆம் ஆண்டில், சேலத்தில், பெரியார் ஒரு பேரணியை மேற்கொண்டார், அதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் சீதாவின் ஆடையில்லாத படங்கள், செருப்பு மாலையுடன் இடம்பெற்றன” என்றார்.

இந்த கருத்து, அப்பட்டமான பொய் என திராவிடர் விடுதலைக் கழகத்தினர் குற்றம் சாட்டினார். அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போலீஸில் புகார் பதிவு செய்தனர்.

உடலை டோன் செய்யும் ‘மயில்’ போஸ்: ஷில்பா ஷெட்டியின் அழகு சீக்ரெட்

பின்னர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் அவருக்கு எதிராக "ரஜினியின் வீடு முற்றுகை" போராட்டத்தை நடத்தினர். இருப்பினும் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்றார் ரஜினி.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment