‘தர்பார்’ படத்திற்கு தடை கோரி வழக்கு: மலேசிய வினியோகஸ்தர் அதிரடி
Darbar Case In Madras High Court: மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், மனு குறித்து ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Rajinikanth's Darbar Tamil Movie News: நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசிய வினியோகஸ்தர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
Advertisment
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மலேசியாவை சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனுவில், ‘நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.o படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்று படத்தை வெளியிட்டோம்.
அதுமட்டுமல்லாமல் படத்தயாரிப்புக்கு என தனியாக 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கினோம். அந்த தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருக்கிறது. அந்த தொகையை வழங்காத வரை, தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், மனு குறித்த ஜனவரி 2 ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.