‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்

சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்

actor ponnambalam health news, rajinikanth ,
actor ponnambalam health news, rajinikanth ,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதில், மத்தியப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தானில், மதியம் வரை காங்கிரசுக்கு டஃப் கொடுத்தாலும், அதன்பின் வெகுவாக பின் தங்கிவிட்டது. இதனால், அங்கு முன்னிலையில் இருக்கும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதில் முனைப்புடன் உள்ளது.

மற்றபடி மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும் அடி வாங்கியிருக்கிறது.

இந்த நிலையில், மும்பைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, “பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதை நன்றாக காட்டுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க – ஐந்து மாநில தேர்தல் Live Updates காண இங்கே க்ளிக் செய்யவும்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth five state election results bjp

Next Story
சென்னை மக்களே உஷார்.. வரும் 15 ஆம் தேதி மையம் கொள்ளும் புயல்!today chennai weather forecast
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com