Rajinikanth on Tasmac: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது.
டாஸ்மாக்கை மூடியதால் அரசுக்கு வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கேரள சிறுமி ஊர் திரும்ப உதவி : திமுக எம்.பி. தமிழச்சிக்கு குவியும் பாராட்டுகள்
டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு மக்கள், அரசியல் கட்சியின் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாட்டை விமர்சித்து நடிகர் ரஜினி காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கை அரசு திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறுந்து விடுங்கள் என ரஜினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், '' இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
ரஜினி எந்த கருத்து சொன்னாலும், அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வருவது உலக வழக்கம். அதன்படி, இச்சம்பவத்துக்கும் வலுவான ஆதரவும், மிக வலுவான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
தலைவா மாஸ் pic.twitter.com/9AMlmehGgA
— SK خليل (@SK32325815) May 10, 2020
மதுகடைகளை அரசு திறந்தால் அடுத்து ஆட்சிக்கு
வரும் கனவை மறந்திட வேண்டும்: ரஜினி.
திறக்க சொன்ன மோடி அரசுக்கும்
இது பொருந்தும்தானே?
— Arunan Kathiresan (@Arunan22) May 10, 2020
கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை கூறுங்கள் எஜமான்.
நீங்கள் நாளைய அரசியல் கட்சித் தலைவர் ஆக போறீங்க...ஆட்சி அமைக்கவும் விரும்புகிறீர்கள்....
அரசுக்கு ஆலோசனை கூறுங்கள்.....
உங்களின் கருத்துகளுக்குத்தானே மதிப்பு இருக்கு...
— Dr. G.Balamurugan (@bala9367708317) May 10, 2020
#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
Thalaiva, I support for u???? pic.twitter.com/Y4EpOeDu4B
— அஜித் அஸ்வந்த் (@jai_ashwanth) May 10, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.