Advertisment

ரஜினியுடன் கூட்டு சேரும் பாமக; டிடிவிக்கு நோ - தமிழருவி மணியன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth, rajini makkal mandram press meet

Arun Janardhanan

Advertisment

சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் 69 வயதான ரஜினிகாந்த், 1996 ல் அப்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பின்னர், அரசியலில் தனது நுழைவை அறிவிக்க 22 ஆண்டுகள் காத்திருந்தார். டிசம்பர் 31, 2017 அன்று 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று அந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளும், அவரது நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும், ரஜினி ஏப்ரல் மாதம் கட்சி தொடங்கவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், ஏப்ரல் 14 க்குப் பிறகு எந்த நேரத்திலும் கட்சி தொடங்கலாம் என்று கூறினார்.

விஜய், அன்புச்செழியனுக்கு சம்மன்; அடுத்த கேள்விகள் ரெடி! - மீண்டும் விசாரிக்கும் ஐடி

ரஜினிகாந்த் அரசியல் ரீதியாக பாஜகவை நோக்கி சாய்வதாகவும், சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் எஸ்.குருமூர்த்தியால் இயக்கப்படுவதாகவும் பலர் நம்புகின்றனர். அரசியல் விவகாரங்களில் ரஜினியின் அரசியல் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் தமிழருவி மணியன் செயல்படுவார் என்று நம்பப்படுகிறது.

மற்ற கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மணியன், பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார், ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் என்டிஏவின் கூட்டு கட்சியான பாமக, ரஜினிகாந்த் உடன் இருக்கும் என்றும், "மேலும் கட்சிகள் காத்திருக்கின்றன" என்றும் கூறினார்.

"பாமக, விஜயகாந்தின் தேமுதிக மற்றும் வைகோவின் மதிமுக  ஆகியவற்றின் ஆதரவுடன் என்.டி.ஏ-க்காக 2014 மக்களவைத் தேர்தலுக்காக நான் அமைத்ததைப் போல வானவில் போன்ற ஒரு கூட்டணி இருக்கும். அந்த கூட்டணி கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகளைப் பெற்றது" என்று அவர் கூறினார்.

ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா என்பது குறித்து தமிழருவி மணியன் குறிப்பிடவில்லை என்றாலும், டிடிவி தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினி திட்டவட்டமாக இருப்பதாக கூறினார்.

"பாஜகவுடனான ஒரு கூட்டணியை ரஜினிகாந்த்தே முடிவு செய்வார், ஆனால் அவர் தினகரனுடன் கூட்டணி வைத்தால் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார்," என்று கூறினார்.

ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, அரசியல் அரங்கில் ரஜினிக்கு பாஜக "நிச்சயமாக" உதவும் என்று உறுதிப்பட தெரிவித்தது. "பாஜக, ரஜினியுடன் கூட்டணியில் சேரலாம் அல்லது சேராமல் போகலாம். ஆனால் ஒப்பந்தத்தைப் பொருட்படுத்தாமல், பாஜக நிச்சயமாக ரஜினிகாந்திற்கு உதவும், ஏனெனில் தமிழகத்தில் திமுகவை தோற்கடிப்பதே பாஜகவின் நோக்கம்" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் கட்சி தொடங்கப்பட வாய்ப்புள்ள செய்தியை உறுதிப்படுத்திய தமிழருவி மணியன், "சரியான தேதி குறித்து உறுதியாக தெரியவில்லை" என்று தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி - மு.க ஸ்டாலின்

"அன்று, ரஜினிகாந்த் தனது முதல் கட்சி மாநாட்டின் தேதியை அறிவிப்பார், (என்று எதிர்பார்க்கப்படுகிறது). அது ஒரு ஒரு மகத்தான நிகழ்வாக இருக்கப் போகிறது…. கட்சி மாநாட்டை ஆகஸ்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் முதல் வாரத்திற்குள், அவர் தனது அரசியல் திட்டம் மற்றும் கொள்கைகளை மக்களைச் சந்தித்து விளக்க, மாநில அளவிலான சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார்" என்றார்.

காற்று "சாதகமாக" வீசுகிறது என்று கூறிய மணியன், சமீபத்திய நிகழ்வுகள் "ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவை நிலைகுலைய வைத்துவிட்டது" என்றும் கூறினார்.

அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில், அதில் அவரைத் தவிர வேறு எந்த முக்கிய முகமும் இல்லை, இதனை, ரஜினிகாந்தின் முகாமில் உள்ள பலர் சவால்களை ஒப்புக்கொள்கிறார்கள், மாநில அரசியலில் பெரும் செல்வாகுள்ள தலைவர் ஒருவரின் நெருங்கிய தொடர்பு கூறுகையில், "குறைந்தது இரண்டு உயர்மட்ட அதிமுக தலைவர்கள் ரஜினி கட்சியில் சேர வாய்ப்புள்ளது" என்றார்.

ஆனால் எம்ஜிஆர் - அதிமுகவை தொடங்கிய போது கூட இரண்டாம் நிலை தலைவர் இல்லை என்பதை மணியன் சுட்டிக்காட்டினார். "இறுதியில் மாவட்ட அளவிலான தலைவர்கள் மாநில தலைவர்களாக உருவெடுத்தனர்," என்று அவர் கூறினார்.

நிதியைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான அனைத்து செலவினங்களையும் ரசிகர் மன்றத் தலைவர்கள் தாங்களாகவே பூர்த்தி செய்கிறார்கள். “அவர் (ரஜினிகாந்த்) எங்கள் பயணங்களுக்காகவோ அல்லது அலுவலக செலவுகளுக்காகவோ எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. தேர்தலுக்கான நிதி ஆதாரத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை" என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment