Advertisment

ரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்

மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமன அறிவிப்பின்போது மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் ரஜினிகாந்த்தை டேக் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து எழுதிய ரகசிய கடிதத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்

மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமன அறிவிப்பின்போது, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் ரஜினிகாந்த்தை டேக் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து எழுதிய ரகசிய கடிதத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisment

உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோது உருவாக்கப்பட்ட மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இதுவரை இயக்குனர் நியமிக்கப்படாமல் இருந்தது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செம்மொழி நிறுவனத்துக்கு விரைவாக இயக்குனரை நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜூன் 1-ம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதலாவது இயக்குனராக ஆர்.சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாதாக டுவிட்டரில் அறிவிதார். இந்த அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம் செய்யப்பட்ட அறிவிப்பில், அமைச்சராகவோ அல்லது அரசாங்க அமைப்பில் எந்த பதவியும் வகிக்காத நடிகர் ரஜினிகாந்த்தை டுவிட் செய்தது ஏன் என்று சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையானது. ஆனால், ரஜினி ரசிகர்கள் மத்திய அமைச்சர் டேக் செய்ததை வரவேற்று ரஜினிக்கு ஆதரவாகப் பேசினார்கள். இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பதிவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ”தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றி”என்று தெரிவித்திருந்தார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு இயக்குனர் அறிவிப்பின்போது மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடிகர் ரஜினிகாந்த்தை டேக் செய்த விவகாரத்தால் எழுந்த சர்ச்சை ஒய்ந்து முடிவதற்குள், இயக்குனர் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாத் எழுதிய ரகசிய கடிதத்தை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில், ரஜினிகாந்த், பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டர் ஐடியை டேக் செய்து நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிவில், ரஜினி எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்மொழியைப் உயர்த்துவதற்கான உங்களுடைய ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும் நன்றி. சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முதல் இயக்குனராக பேராசிரியர் சந்திரசேகரனை நியமனம் செய்ததற்கு நன்றி . என்னுடைய நல்வாழ்த்துகள் என்று எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ரகசியமாக எழுதிய கடிதத்தை அவர் பொதுவில் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவாக பதிவிட்டு உற்சாகம் தெரிவிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், செம்மொழி நிறுவனத்துக்கு இயக்குனர் நியமன அறிவிப்பின்போது அரசியலில் எந்த பதவியிலும் இல்லாத ஒரு நடிகரான ரஜினியை மத்திய அமைச்சர் டேக் செய்து டுவிட் செய்திருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Rajinikanth Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment