/tamil-ie/media/media_files/uploads/2019/12/images-1.jpg)
corona live news
தமிழ்நாடு போக்குவரத்து துறை முதல் முறையாக சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்துள்ளது. சென்னையில் அமைந்திருக்கும் புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனைகள் பெற்று வரும் கைதிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட 67 கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனும் இந்த திட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு வேலைக்காக யாரும் திண்டாடக்கூடாது என்பதற்காக இரண்டு வருடத்திற்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த சைலேந்திர பாபுவால் இந்த திட்டம் புழல் சிறையில் அறிமுகம் செய்யப்பட்டது. டெக் மஹிந்திரா மற்றும் சீஷா (Samiti for Education, Environment, Social and Health Action) இணைந்து இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது. பிற்கு சிறைக்குள்ளேயே ஓட்டுநர் பயிற்சி பெற இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடும் மாணவர்கள்
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான நபர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படவில்லை. சிறையில் இருந்து நன்னடத்தை பட்டியலில் இடம் பெற்றிருந்த நபர்களை மட்டும் தேர்வு செய்து இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. செங்குன்றம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்து தான் இந்த சிறை கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. சிறையில் இருக்கும் வரை முகவரி புழல் சிறை முகவரியாக தான் இருக்கும். தண்டனை முடிந்து வெளியே வந்த பின்பு தங்களின் முகவரிகளை இவர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : என்.ஆர்.சி-ஐ எங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த மாட்டோம் – நவீன் பட்நாயக் திட்டவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.