தமிழகத்தில் தெரிந்தது பிறை; ரமலான் நோன்பு தொடங்கியது – தலைமை காஜி அறிவிப்பு

Ramadan Fasting: தமிழகத்தில் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை ஜமாத்துல் உலமா சபையும் உறுதிப்படுத்தியுள்ளது

By: Updated: April 24, 2020, 10:52:23 PM

Ramadan Fasting in Tamil Nadu: வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் ரமலான் மாதம் நாளை (ஏப்.25) தொடங்குகிறது என தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருப்பது ஆகும். இறை வசனங்கள் இறக்கப்பட்ட மாதம் என்பதால் இம்மாதத்திற்கு சிறப்பு உண்டு. 30 நாட்கள் நோன்பிருக்கும் இந்த மாதத்தில் அதிகாலையில் உணவு உண்டு நோன்பு வைத்தபின் தண்ணீர் கூட அருந்தாமல் மாலை வரை கடைப்பிடித்து சூரிய அஸ்தமானத்துக்குப் பின் நோன்பைத் திறப்பார்கள். இடையில் வழக்கமான ஐந்து வேளை தொழுகையுடன் கூடுதலாக இரவு தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகையும் உண்டு.

கொரோனா நிவாரண நிதி அதிகம் கொடுத்தது ரஜினியா? விஜய்யா? – கொலையில் முடிந்த மோதல்

இந்த மாதங்களில் ஜகாத் எனும் ஏழைகளுக்கு தானம் செய்வதும் ஒரு கடமையாக்கப்பட்டுள்ளது. வருமானத்தைக் கணக்கிட்டு 7 -ல் ஒரு பகுதி அல்லது தங்களால் இயன்றதைத் தானமாக அளிப்பார்கள். 30 நோன்புகள் முடிந்த பின்னர் பிறைக் கணக்கின்படி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

பிறைக் கணக்கை வைத்து கணக்கிடப்படுவதால் பிறை தெரிவதை ஒட்டியே நோன்பும், பண்டிகையும் அனுசரிக்கப்படும். தமிழகத்தில் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனை ஜமாத்துல் உலமா சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா பரிசோதனை மாதிரிகள் – லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு

இந்த மாதத்தில் ஒவ்வொரு இஸ்லாமியரும் தவறாமல் நோன்பிருப்பார். ஐந்து வேளை தொழுகையுடன் சிறப்புத் தொழுகையும் தொழுவார்கள். தற்போது கரோனா தொற்று இருக்கும் நிலையில் கூட்டுத் தொழுகையைத் தவிர்க்கும்படியும் அவரவர் வீடுகளில் தொழும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நோன்புக்கஞ்சியை பள்ளிவாசலில் காய்ச்ச வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரமலான் நோன்பு குறித்து அமைச்சர் நிலோபர் கஃபில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் வந்துள்ளது.

இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நாமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுது வருகின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இஃப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ramadan fasting will start tomorrow tn kazi announced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X