Tasmac: : தமிழகத்தில் கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று( மே 7) முதல் செயல்பட உள்ளன. காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவரவர் வயதுக்கு ஏற்ற மதுபான விற்பனை நேரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆந்திரா, கார்நாடகா எல்லைப்பகுதிகளில் உள்ள குடிமகன்கள் மதுவாங்க அதிகாலையிலேயே சென்றனர்.
கொரோனா இல்லாத பகுதிகளில் தடுப்புகளை அகற்றக் கோரி வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
இதனால், கர்நாடகா, ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லை பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி தமிழக அரசு நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.
ஆனால், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை திறக்கப்படாது. இந்த கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும், மதுவாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 03.00 மணி முதல் 5 மணி வரை மதுபானங்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.