Rip current occurred at Thiruchendur beach after Amphan cyclone landfall : இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உம்பன் புயல் கொல்கத்தாவில் கரையை கடந்தது. கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை உருவாக்கிய இந்த புயலால் கொல்கத்தாவில் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூரில் 100 அடிக்கும் மேல் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் தண்ணீருக்கு அடியில் இருந்த பாறைகள் எல்லாம் வெளியே அழகாக தெரிய துவங்கியுள்ளது. புயலின் காராணமாக கூட இப்படி கடல் உள்வாங்கியிருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும் உள்வாங்கிய கடல் சில மணி நேரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே இருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.