திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல் ; அச்சத்தில் மக்கள்!

உள்வாங்கிய கடல் சில மணி நேரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே இருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rip current occured at Thiruchendur beach after Amphan cyclone landfall
Rip current occured at Thiruchendur beach after Amphan cyclone landfall

Rip current occurred at Thiruchendur beach after Amphan cyclone landfall : இரண்டு நாட்களுக்கு முன்பு தான் உம்பன் புயல் கொல்கத்தாவில் கரையை கடந்தது. கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெரும் சேதத்தை உருவாக்கிய இந்த புயலால் கொல்கத்தாவில் மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க : உம்பன் புயல் சேதம்: மேற்கு வங்கத்தில் இன்று மோடி ஆய்வு

திருச்செந்தூரில் 100 அடிக்கும் மேல் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் தண்ணீருக்கு அடியில் இருந்த பாறைகள் எல்லாம் வெளியே அழகாக தெரிய துவங்கியுள்ளது. புயலின் காராணமாக கூட இப்படி கடல் உள்வாங்கியிருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். இருப்பினும் உள்வாங்கிய கடல் சில மணி நேரங்களாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே இருக்கிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : உம்பன் சூறாவளி, கொரோனாவை விட பெரிய பேரழிவு – மம்தா பானர்ஜி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rip current occurred at thiruchendur beach after amphan cyclone landfall

Next Story
”தென்பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும்” – தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – முக ஸ்டாலின் அறிக்கை2nd year Sterlite firing anniversary - MK Stalin Statement
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express