Advertisment

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை மறைக்க முடியாது - ஐகோர்ட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rss stand against muslims 10th class subject madras high court

rss stand against muslims 10th class subject madras high court

'இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை 'இந்து மகா சபா' மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்தது' என பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்றை நீக்கும் தமிழக அரசின் சுற்றறிக்கை எதிர்த்த மனுவிக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் 'இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை 'இந்து மகா சா' மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாட புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திர சேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

டெல்லிக்கு நிகராக பெயரெடுத்த சென்னை! வெட்கப்படனும் சென்னை மக்களே!

இந்த வழக்கு கடந்த மாதம் தனி நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மேற்கொண்டு அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாசகங்கள் நீக்கப்படும் எனவும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் இந்த வாசகங்கள் மறைக்கப்படும் என விளக்கமளித்த தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தமிழக அரசு வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.எஸ் குறித்த அந்த வரலாற்று வாசகங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க கூடாது எனவும் அரசின் முடிவுக்கு தடை கோரியும் தந்தை பெரியார் திராவிட கழக துணை தலைவரும் வழக்கறிஞருமான துரைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான நாதுராம் கோட்சே, சாவர்க்கர், கோல்வார்கள் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாறு என்ற நிலையில், ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தக்த்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் படியே இந்த பாடம் 10 வகுப்பு புத்தகத்தில் சேர்க்கபட்டதாகவும் ஆனால் தற்போது பாட புத்தகத்தில் இருந்து இந்த பகுதியை நீக்க முடிவு செய்யும் முன்னர் அரசு எந்த நிபுணர் குழுவின் கருத்தையும் பரிசீலிக்கவில்லை எனவே தற்போது இடம்பெற்றுள்ள பகுதியை நீக்கும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

கொரோனாவால் கைவிடப்பட்ட ஜப்பான் கப்பலில் தத்தளிக்கும் தமிழர்களின் நிலை என்ன?

இதனை கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்றை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோல தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.

மேலும், இது போன்ற வரலாறுகளை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment