2010-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் கலந்துக் கொண்டவரும், பலமுறை தமிழகத்திற்கு வந்து சென்றவருமான, ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல தமிழ் அறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி செவ்வாய்க்கிழமை காலமானார்.
பாஜக.வில் எந்தப் பணியை கொடுத்தாலும் செய்வேன்: குஷ்பூ Exclusive
"அவர் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில் கோவிட் -19 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்" என்று இந்தோ-ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் செயலாளரும் பேராசிரியர் டுபியன்ஸ்கியின் நண்பருமான பி. தங்கப்பன் கூறினார்.
அவர் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருடைய மாணவர்கள் இன்று கல்வித்துறையிலும் ஊடகத்திலும் பணியாற்றுகிறார்கள். தமிழ் எழுத்தாளர் டி.ஜெயகாந்தன், தமிழ் அறிஞர் சிவதம்பி, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் அவரது நண்பர்கள்.
"சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பிறகு, அங்கிருந்தவர்களுக்கு தமிழ் கற்றல் மீது ஆர்வம் குறைந்தது, ஆனால் டூபியன்ஸ்கி ஒற்றைக் கையால் அந்த ஆர்வத்தை புதுப்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் சங்கத் தமிழ் குறித்த ஒர்க் ஷாப் ஒன்றை ஏற்பாடு செய்தார்” என்று எழுத்தாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான டி.ரவிக்குமார் கூறினார்.
பேராசிரியர் துபியன்ஸ்கி வழங்கிய ஒரு கட்டுரையை நினைவு கூர்ந்த திரு. ரவிக்குமார், தொல்காப்பியம், தமிழ் இலக்கண உரை மற்றும் சங்க இலக்கியங்களுக்கு இடையிலான முரண்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்பினார் என்றார். "அவர் நிறைய எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டியிருந்தார். ஆனால் அந்த விஷயம் இன்னும் விவாதிக்கப்படாமல் உள்ளது” என்றார்.
‘சூரரைப் போற்று’ லட்சியப் பெண் அபர்ணா கேரக்டர் உருவானது எப்படி? வீடியோ
பேராசிரியர் துபியன்ஸ்கி ஒரு திறமையான இசைக்கலைஞர் என்று திரு. தங்கப்பன் கூறினார். "ஒருமுறை நாங்கள் இசைஞானி இளையராஜாவை சந்தித்தோம். அப்போது விவாதம் இசையைச் சுற்றி வந்தது. இளையராஜா தனது இசையைக் கேட்டீர்களா என்று கேட்டபோது, பேராசிரியர் துபியன்ஸ்கி, சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ஒரு பாடலான ‘இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது...’ என்ற பாடலை இசைத்தார். இதைக் கேட்ட இளையராஜா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்” என்று தங்கப்பன் நினைவு கூர்ந்தார்.
பாரதியார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, சேலத்தில் பாரதியார் சிலையைத் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”