Advertisment

பினராயி விஜயன் உருவ பொம்மை எரிப்பு... தமிழிசை சௌந்தராஜன் மீது 3 வழக்குகள் பதிவு

பெண்கள் கோவிலுக்குள் காவல் துறையின் உதவியுடன் சென்றது அப்பட்டமான சூழ்ச்சி, விதிமீறல் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala Temple Row Protest

Sabarimala Temple Row Protest

Sabarimala Temple Row Protest : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்தக்கூடாது என்று கூறி பந்தளம் குடும்பத்தினர் மற்றும் தலைமை தந்திரிகள் சார்பில் பல ஆண்டுகளாக ஒரு தடையை விதித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டத்து. ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி விசாரணை செய்து தீர்ப்பினை வழங்கியது. ஒரு நீதிபதியின் மாற்றுக் கருத்தினை தவிர நால்வர் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பினை வழங்கினார்கள்.

Advertisment

மேலும் படிக்க : கேரளா முழுவதும் இன்று போராட்டம்... இந்து அமைப்பினர் முழு கடையடைப்பிற்கு அழைப்பு

கோவிலிற்குள் தரிசனம் நடத்திய பெண்கள்

சில பெண்கள் கோவிலுக்கு சென்று ஐயப்பனை வழிபட முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து அந்த பெண்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் நேற்று (02/01/2018) அன்று வட  கேரளத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் கோவிலுக்கு சென்று வழிபாடுகளை முடித்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்து வந்த நிலையில் பாஜக தொண்டர் ஒருவர் கலவரத்தில் பலத்த காயம் அடைந்து மரணம் அடைந்தார். பெண்களின் வழிப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு நாள் முழு அடைப்பிற்கு இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Sabarimala Temple Row Protest : கேரளா அரசு விடுதியில் கல்லெறிந்து தாக்குதல்

கேரளா மற்றுமன்றி தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  சென்னை ஆயிரம் விளக்கு கேரளா சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் விடுதிகளின் மீது அடையாளம் தெரியாத 15 மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

தமிழிசை சௌந்தராஜன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்

பல்லாவரம் தமிழிசை தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழிசை “அப்பட்டமான சூழ்ச்சி, விதிமீறல்” என்று அவர் கூறினார். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் தமிழிசை சௌந்தராஜன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் மேல் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பக்தன், VHB மாநில செயலாளர் ராமன், பாஜக கோட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

களியக்காவிளையில் பேருந்துகள் நிறுத்தம்

தமிழகம் மற்றும் கேரள எல்லையில் பாதுகாப்பு காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி களியக்காவிளை, திருநெல்வேலி தென்காசி பகுதிகளில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Sabarimala Lord Ayappa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment