Advertisment

சசிகலாவால் நள்ளிரவில் அலறிய மைக்குகள்; பரபரப்பான காவலர்கள்   

சசிகலா காரில் மோதிய டோல் பிளாசா ஸ்டிக்; நள்ளிரவில் போராட்டம்; பரபரப்புக்குள்ளான காவலர்கள்

author-image
WebDesk
New Update
சசிகலாவால் நள்ளிரவில் அலறிய மைக்குகள்; பரபரப்பான காவலர்கள்   

Sasikala car hit by toll plaza stick at Trichy Highway Supporters protest: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் ஸ்கேன் ஸ்டிக், கார் கண்ணாடியில் அடித்ததை தொடர்ந்து, ஆதரவாளர்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Advertisment

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான விகே.சசிகலா நேற்று இரவு 11.45 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சைக்கு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றுள்ளார்.

அப்பொழுது துவாக்குடி சுங்கச்சாவடியில் செல்லும் பொழுது 5 கார்களுடன் சென்று உள்ளார். முன்னாள் சென்ற நான்கு கார்களும் ஸ்கேன் செய்யப்பட்டு சென்றதும், பின்னால் சென்ற சசிகலாவின் கார் சென்றுள்ளது.

அப்பொழுது சசிகலாவின் கார் கண்ணாடியில் சுங்கசாவடி ஸ்கேன் ஸ்டிக் தட்டி உள்ளது. இதனால் கோவம் அடைந்த சசிகலா தனது காரை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ மீண்டும் சோதனை

உடனே அவரது ஆதரவாளர்கள் சுங்கச்சாவடியில் உள்ள கட்டண நுழைவாயில்களில் ஆங்காங்கே கார்களை அடுத்தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் டோல் பிளாசா ஊழியர் அங்கிருந்தால் சசிகலாவின் ஆதரவாளர்கள் தாக்கி விடுவார்கள் என ஒடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி மேலாளர் வரவேண்டும் என சசிகலா கூறியதாக கூறப்படுகிறது. மேலும் இது போல் தனக்கு மூன்று முறை இந்த துவாக்குடி சுங்கச்சாவடியில் நடந்துள்ளதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோல் நடத்துகிறார்கள் என எனக்கு சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலாளர் வரவில்லை என்றால் போராட்டம் தொடரும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இரவு நேர ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட சசிகலா தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பலனளிக்காததை தொடர்ந்து சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வாகனத்தில் ஸ்கேன் ஸ்டிக் மோதப்பட்டதற்கு சுங்கச்சாவடி மேலாளர் சசிகலாவிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

publive-image

மேலும் இந்த பிரச்சனை குறித்து நீங்கள் வேண்டுமானால் எழுத்து பூர்வமாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறையினர் சசிகலா தரப்பினரிடம் கூறியுள்ளனர்.

அதற்கு சசிகலா தரப்பினர் புகார் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் சசிகலா காரை விட்டு இறங்காமல் காரில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு 1:15 மணிக்கு பிறகு சசிகலா தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சசிகலா காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் ஸ்கேன் ஸ்டிக் விழும்போது ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால் சசிகலாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் காவல் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அனைவருமே பிரச்சனை எழா வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டனர். நள்ளிரவில் உயர் அதிகாரி முதல் கீழ்நிலை காவலர் வரை அனைவரின் மைக்கும் அலறியதால் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு நிலவியது.

இது பற்றி சுங்கச்சாவடி தரப்பினரிடம் கேட்ட பொழுது சசிகலா வி.ஐ.பி செல்லும் வழியில் வராமல் நார்மலாக செல்லும் பொது வழியில் வந்தார் என்றும் அதனால் தான் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்து விட்டதாகவும் கூறினார்கள்.

சசிகலா ஆதரவாளரிடம் கேட்ட பொழுது சசிகலா எப்பொழுதுமே வி.ஐ.பி வழியில் செல்வதில்லை. பொது வழியில் தான் செல்வார் எந்த டோல் ப்ளாசாவிலும் இதுபோல் சம்பவங்கள் நிகழவில்லை.

துவாக்குடி டோல் பிளாசாவில் மட்டும்தான் இது மூன்றாவது முறையாக சசிகலாவுக்கு நிகழ்ந்துள்ளது என்று கூறியதோடு இன்று துவாக்குடி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

க. சண்முகவடிவேல் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment