போலீஸ் காவலில் இருந்த பி.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜெ.பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததற்கு சமூக ஊடகங்களில் கண்டனங்கள் பெருகி வருகின்றன. கோவிட்-19 தொற்று காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மிருகத்தனமான நடந்துக் கொள்வதாக புகார்கள் எழுந்தன. ஆனால் உயிரிழந்தவர்களுக்குக் காரணமானவர்களுக்கு, எதிராக மாநில அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்களின் ஆடைகள் ரத்தத்தால் நினைக்கப்பட்டது : குடும்ப உறுப்பினர்களை பதைக்க வைத்த காட்சிகள்
சாத்தான்குளம் நகரில் கோவிட் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தந்தை-மகன் இருவரையும் சித்திரவதை செய்த காவல்துறையினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. காவலுக்கு 'ஃபிட்' என்று அரசு மருத்துவர் சான்றளிக்க, அவர்களை மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்ய, சிறை ஊழியர்கள் அந்த அப்பா மகனை அனுமதித்திருந்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவரைக் கொன்றதாக சாத்தான்குளம் காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ள கயல்பட்டினம் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை மீறுபவரின் சிறுநீரகங்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதி கோரி சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரபலங்களில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஒருவர். பின்னர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் காவல்துறையை கண்டித்தார்.
எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா?
பிரேத பரிசோதனை நடந்து 24 மணி நேரத்திற்குப் பிறகும், ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸுக்கு காவல்துறையினர் ஏற்படுத்திய காயங்களின் தன்மை இன்னும் வெளியிடப்படவில்லை. காவல்துறையினர் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்-ல் காயங்கள் சுயமாக ஏற்பட்டதாகக் கூறுகிறது. இருவரும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ள தரையில் உருண்டார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தொற்றுநோய் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கும் போலீசாருக்கு யோகா மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசு இணங்குவதாக முதல்வர் கூறியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.