நீதித்துறையை அவமரியாதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என சவுக்கு சங்கர் பேசி இருந்த நிலையில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இன்று அவருக்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி… சிலர் ஆணவத்தால் சிக்கித் தவிக்கிறது – டிடிவி தினகரன்
அப்போது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணை முடிவுற்ற நிலையில் சவுக்கு சங்கர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது, அவரை போலீசார் சுற்றி வளைத்தனர், அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுத்ததால் சவுக்கு சங்கர் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார். அவர் சிறையில் இருந்து மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil