உதயநிதிக்கு எதிராக தேர்தலில் நிற்க விரும்புகிறேன் என்றும் யூடியூப் சேனல்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை நான் கடுமையான எதிர்க்கிறேன் என்றும் ஐ.ஏ.எஸ் மாணவர்களுடனான உரையாடலில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி மாணவர்களுடன் ஒரு நாள் ஆசிரியர் நிகழ்வில் சவுக்கு சங்கர் உரையாடும் வீடியோவை பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சவுக்கு சங்கரை அறிமுகப்படுத்தும் அகாடமியின் இயக்குனர், இவர் சவுக்கு சங்கர் அல்ல, சரக்கு சங்கர். எல்லா அரசியல்வாதிகளின் குப்பை சரக்குகளும் அவரிடம் இருக்கு என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: இலங்கைத் தமிழர்களை மோடி நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கிறார்: இலங்கை நல்லூரில் அண்ணாமலை பேச்சு
பின்னர் பேசிய சவுக்கு சங்கர்
2024ல் மீண்டும் மோடி
தமிழ்நாட்டுக்கு விவசாய வளர்ச்சி முக்கியமா, அதை அழித்து வரும் தொழில் வளர்ச்சி முக்கியமா என்ற கேள்விக்கு, சமநிலையை பேண வேண்டியது அவசியம் என்று கூறினார்.
மீடியாக்கள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்து, வருமானம் ஈட்டுவது குறித்த கேள்விக்கு, சப்ஸ்கிரிஷன் அடிப்படையிலான வருமானத்திற்கு மாறுவது தான் இதற்கான தற்போதைய தீர்வு என்றார்.
50 ஆண்டுகால திராவிட அரசியல் மற்றும் சீமானை சந்தித்தது குறித்த கேள்விக்கு, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் அரசியலை மேற்கோளிட்டு, திராவிட அரசியலுக்கான தேவை தமிழகத்தில் உள்ளது. மம்தா போல் இங்கு யாரும் இன்னும் வரவில்லை. திராவிட அரசியலின் தற்போதைய தேவை மாநில சுயாட்சி. திராவிட அரசியலுக்கு மாற்று தேசிய அரசியல். அவர்கள் ஒரே நாடு, ஒரே அரசியல், ஒரே தேர்தலை முன்னிறுத்துகிறார்கள், அதனை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதனால் திராவிட அரசியலின் தேவை உள்ளது.
எனக்கு குண்டாஸ் வழக்கு தயாராகிக் கொண்டிருந்தப்போது, அதனை கடுமையாக கண்டித்தவர் சீமான். அவருக்கு நன்றி தெரிவிக்க சந்தித்தேன். அதேபோல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை இதுவரை சந்தித்ததில்லை, வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன். ஆனால் கொள்கை முரண்பாடு உள்ளது, என்று கூறினார்.
எம்.எல்.ஏ தேர்தலில் நிற்பது குறித்த கேள்விக்கு, உதயநிதிக்கு எதிராக நிற்க விரும்புகிறேன் என்றார். மேலும், யூடியூப் சேனல்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை நான் கடுமையான எதிர்க்கிறேன் என்றார்.
உதயநிதி அமைச்சரானதை எதிர்ப்பது ஏன் என்ற கேள்விக்கு, அவர் தகுதியற்ற நபர் என்பதால் எதிர்க்கிறேன். எம்.எல்.ஏ., ஆவதற்கு கூட தகுதியில்லாதவர். ஸ்டாலினை விட இன்றைக்கு அதிகாரமிக்கவர் உதயநிதி. கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. 10 வருடமாக நான் தி.மு.க.,வுடன் நெருக்கமாக பழகினேன். அப்போது அ.தி.மு.க.,வை எதிர்த்தேன். இப்போது தி.மு.க.,வை எதிர்க்கிறேன், என்று கூறினார்.
ஊழலை வெளிக்கொணரவே இப்போது, அ.தி.மு.க உடன் இருக்கிறது. ஊழலுக்கு எதிரானவர்கள் காணாமல் போனது போல் நான் சாக விரும்பவில்லை. எனவே எதிர்கட்சியுடன் கூட்டு வைக்கிறேன். என்றும் சவுக்கு சங்கர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil