scorecardresearch

அமைச்சர் பி.டி.ஆர் ‘டான்’ என்றால், நாங்க ‘சூப்பர் டான்’: செல்லூர் ராஜு

வாரிசு திரைப்படத்தில் உண்மையில் உதயநிதி தான் நடிக்க வேண்டும். நிதியமைச்சர் டான் என்றால் நாங்கள் சூப்பர் டான்; மதுரை அ.தி.மு.க கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

அமைச்சர் பி.டி.ஆர் ‘டான்’ என்றால், நாங்க ‘சூப்பர் டான்’: செல்லூர் ராஜு

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும், அதற்கு கதை கலைஞர் கருணாநிதியும், திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அ.தி.மு.க- வின் பொன் விழா மற்றும் 51வது ஆண்டு  துவக்க விழாவை முன்னிட்டு மதுரை ஜே.எம் கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு சிறப்புரை ஆற்றினார்.

இதையும் படியுங்கள்: செந்தில் பாலாஜி 5 படங்கள்; பி.டி.ஆர் 4 படங்கள்… தீபாவளிக்கு வாழ்த்து சொன்னது இரண்டே அமைச்சர்கள்தான்!

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது; எம்.ஜி.ஆர் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அ.தி.மு.க உருவான வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சியாக அ.தி.மு.க திகழ்கிறது. மக்களுக்கான இயக்கம் அ.தி.மு.க.

தி.மு.க.,விற்கு செல்வங்களை அள்ளிக்கொடுத்தும், மறையும் தருவாயில் தொழிலாளிகளுக்கு சொத்தையும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர், அவர் அவதார புருஷர்.

எம்.ஜி.ஆர் -க்கு பிறகு அ.தி.மு.க அழிந்து விடும் என்று கலைஞர் உள்பட அனைவரும் நினைத்தார்கள். பலமுறை பிரிந்து பலமுறை இணைந்தும் இருக்கிறது அ.தி.மு.க. இன்றைக்கும் அத்தகைய சோதனை தான் நடக்கிறது.

எப்போ ஸ்டாலின் போவார், எடப்பாடி எப்போ வருவார், விடியல் தருவார் என மக்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

ஜாதிக்குறித்து ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியுள்ளார். ’ஓசி’ ’ஓசி’ என்று பேசும் தி.மு.க அமைச்சர் பயன்படுத்தும் அனைத்தும் ஓசிதான்… அவர்தம் மனைவிமார்களை தவிர மற்றவைகள் ஓசிதான்.

நிதி அமைச்சர் டான் என்றால் நாங்கள் சூப்பர் டான்.. தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டு காரணம் சொல்லுகிறார்.. அதற்கு நிதியமைச்சர் தேவை இல்லையே அதிகாரி போதும். நிதியமைச்சர் நீண்ட காலம் பதவியில் இருக்க வேண்டும், தி.மு.க ஆட்சிக்கு டான் (நிதியமைச்சர்) தான் ஆபத்து.

முதல் கையழுத்தே நீட் ரத்து என்று சொன்னீர்கள், இதுவரையில் ரத்து செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்றைக்கு செங்கலை தூக்கினாரோ அன்றில் இருந்து செங்கல், கம்பி உள்ளிட்ட அனைத்து விலையும் உயர்ந்து விட்டது.

எம்.ஜி.ஆர் உடன் தன்னை ஒப்பிடுவதை முதல்வரே ஒத்துகொள்ள மாட்டார். டாஸ்மாக் விற்பனையில் இலக்கு வைத்து விற்பனை செய்யும் அவல நிலையில் தான் தி.மு.க ஆட்சி நடக்கிறது.

தி.மு.க ஆட்சியில் சமூக விரோதிகள் ஒன்று கூடி விட்டனர், கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வெடிப்பை போல், தற்போது கார் வெடித்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது…!

புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது, இது லஞ்சத்திற்கு வழிவகுக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதான் துக்ளக் ஆட்சி…. அபராதம் விதிப்பதை விட விதி மீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியாக அணுக வேண்டும்.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வர உள்ள வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும்.. கதை கலைஞர், திரைக்கதை ஸ்டாலினாக தான் இருக்க வேண்டும்..

மேயரை எதிர்த்து அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுவது உலகத்திலேயே எங்கும் நடைபெறாதது. நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் தி.மு.க ஆட்சி. தற்போது மக்கள் அ.தி.மு.க ஆட்சியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sellur raju says if ptr is don we are super don in madurai admk meeting