பத்திரிகையாளர்- சினிமா பாடலாசிரியர் நெல்லை பாரதி மரணம்: பிரஸ் கிளப் இரங்கல்

சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேச்சாளர், பாடலாசிரியர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

தமிழின் மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

சன் டி.வி கண்மணி: வளர்மதி கிட்ட நம்மளும் லாங்வேஜ் கத்துக்கலாம் போலயே?!

சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேச்சாளர், பாடலாசிரியர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. அவர் நல்ல நடிகர் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஒரு மனிதரை பத்து நிமிடம் அவர் கவனித்து விட்டால். அந்த மனிதரின் மேனரிசத்தை அப்படியே செய்து காட்டுவதில் வல்லவர் என அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுகிறார்கள். பல இளம் படைப்பாளிகளை உருவாக்கிய நெல்லை பாரதி, இறுதி காலத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நெருக்கமாக இருந்தார்.

சினிமா பத்திரிக்கையாளரான நெல்லை பாரதி, சினிமா சிறப்பிதழான வண்ணத்திரையில் பொறுப்பாசிரியராக இருந்தவர். சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

”30 ஆண்டுகளாக பத்திரிகையாளராக செயல்பட்ட நெல்லை பாரதி புலனாய்வு இதழியலில் தனது பணியைத் தொடங்கி சினிமா பத்திரிகையாளராக சிறப்புற பணியாற்றியவர். அன்னாரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருடனும் துயரத்தில் பங்கேற்கிறோம்” என சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருங்கொள்ளை நோயை உலகம் எப்படி விரட்டி அடித்தது?

இன்று பிற்பகலில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. நெல்லை பாரதியின் இல்ல முகவரி,

நெல்லை பாரதி
8/9 ஐந்தாவது தெரு
பிருந்தாவன் நகர்
வளசரவாக்கம்
(கேசவர்த்தினி எதிரில்)
சென்னை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close